மண்டபசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மண்டபசாலை, விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, சாயல்குடிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரின் மக்கள்தொகை ஏறத்தாழ 1300. ஏறத்தாழ 250 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தினுடைய முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, உளுந்து, நெல், பாசி, மொச்சை, கம்பு, சோளம் ஆகியவை முக்கிய விளைபொருள்களாகும். முக்கிய தொழில் விவசாயம் என்றாலும் இந்த கிராமத்தின் எழுத்தறிவு 75% ஆகும். பல பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், இந்திய அரசுப்பணி அதிகாரிகளையும் தனது பங்காக அளித்துள்ளது இவ்வூர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டபசாலை&oldid=2608973" இருந்து மீள்விக்கப்பட்டது