மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
7ஆம் நூ. ஆ. பல்லவ காலத்து தூண்

மண்டகப்பட்டு குடைவரைக் கோயில், தமிழ் நாடு , விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.

இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டு இரும்பு, மரம், செங்கல், சுதை என்பவற்றைப் பயன்படுத்தாமல் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"Dalavanur – Satrumalla Pallava Cave Temple" (20 September 2010). பார்த்த நாள் 10 February 2016.

வெளி இணைப்புகள்[தொகு]