மணி விளக்கு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிவிளக்கு இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1954ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சிராஜுல் மில்லத் ஆ.கா. அப்துல் ஸமது.

இவர் காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு மார்க்க அறிஞர், இசுலாமிய எழுத்தாளர். சென்னையிலிருந்து மணிவிளக்கு இதழை ஆரம்பித்தார்.

பணிக்கூற்று[தொகு]

"இசுலாமிய இலக்கிய மாத இதழ்."

உள்ளடக்கம்[தொகு]

இது ஒரு இசுலாமிய கலை இலக்கிய சஞ்சிகை என்ற அடிப்படையில் கலை, இலக்கிய ஆக்கங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. இவ்விதழில் பல இசுலாமிய எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். இசுலாமிய எழுத்தாளர் வட்டமொன்றை உருவாக்குவதில் மணிவிளக்கு சிறப்பான பணியினை ஆற்றியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_விளக்கு_(சிற்றிதழ்)&oldid=736775" இலிருந்து மீள்விக்கப்பட்டது