உள்ளடக்கத்துக்குச் செல்

மணி பவன், மும்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணி பவன் (Mani Bhavan) என்பது இந்தியாவில் மும்பையின் காம்தேவி வளாகத்தில் உள்ள லேபர்னம் சாலையில் அமைந்துள்ள காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று கட்டிடம் ஆகும். 1917 ஆம் ஆண்டிற்கும் 1934 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மும்பையில் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு இந்த பவன் ஒரு முக்கியமான இடமாகத் திகழ்ந்தது.

மணி பவனுக்கு செல்லும் சாலை

காந்தியின் தலைமையகம்[தொகு]

மணி பவனின் முன் வாயில்.

மணி பவன் காந்தியின் மும்பை தலைமையகமாக 1917 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரை சுமார் 17 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. இந்த மாளிகை காந்தியின் நண்பரும் மும்பையில் தொகுப்பாளருமான ரேவாஷங்கர் ஜக்ஜீவன் ஜாவேரிக்கு சொந்தமானது ஆகும். ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம், சுதேசி, காதி மற்றும் கிலாபத் உள்ளிட்ட பல இயக்கங்களை மணி பவனிலிருந்தே காந்தி தொடங்கினார். காந்தியின் சர்நூற்புச் சக்கரத்துடன் ஆன தொடர்பு 1917 ஆம் ஆண்டில் மணி பவனில் தங்கியிருந்தபோதுதான் தொடங்கியது. மணி பவன் ஹோம் ரூல் இயக்கத்தில் காந்தி இங்கிருந்தபோதுதான் ஈடுபாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டார். அதேபோல் அந்தக் காலகட்டத்தில் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறையைக் கொண்டிருந்த, கால்நடைகளுக்குத் தொந்தரவு செய்கின்ற பழக்கத்தினை எதிர்ப்பதற்காக பசும்பால் குடிக்கும் வழக்கத்தை நிறுத்தினார்.

மகாத்மா காந்தியின் மார்பளவுச்சிலை.

1955 ஆம் ஆண்டில், காந்திக்கு நினைவுச்சின்னமாக இந்தக் கட்டிடத்தை காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை கையகப்படுத்தியது.

காந்தி அருங்காட்சியகம் மற்றும் நூலகம்[தொகு]

மகாத்மாவின் சிலையுடன் கூடிய ஒரு நூலகம் இந்த வளாகத்தில் உள்ளது. அங்கு வருகின்ற பார்வையாளர்கள் அச்சிலைக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். காந்தியின் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள படிக்கட்டுகள் மூலமாக பார்வையாளர்கள் முதல் தளத்திற்குப் பார்வையிட செல்ல வசதி உள்ளது. அந்தப் பகுதியில் காந்தியின் குழந்தைப் பருவத்திலிருந்து அவர் படுகொலை செய்யப்படும் வரையிலான புகைப்படங்கள் ஒரு புகைப்பட தொகுப்பாக, உரிய நாளிதழ்களின் நறுக்குகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காந்தி தங்கியிருந்த காலத்தில் பயன்படுத்திய அறை இந்த பவனின் இரண்டாவது மாடியில் உள்ளது. அங்கு அவர் பயன்படுத்திய இரண்டு சுழல் சக்கரங்களையும், ஒரு புத்தகத்தையும் ஒரு கண்ணாடிப்பேழையில் காணலாம். மேலும் தரையில் படுக்கையையும் காணலாம். அந்த அறைக்கு வலதுபுறம் அவரது வாழ்நாளில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களும் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஜனவரி 4, 1932 ஆம் நாளன்று அவர் கைது செய்யப்பட்ட இடமான மொட்டை மாடியும் உள்ளது.

மரணப்படுக்கையில் இருக்கும் கஸ்தூர்பா, காந்தியின் மடியில் ஓய்வெடுக்கும் மாதிரி.

ஒபாமாவின் வருகை[தொகு]

ஜனாதிபதி பராக் ஒபாமாவும், முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமாவும் மணி பவனில் காந்தியின் அறையில் பார்வையிடும் காட்சி

பராக் ஒபாமா தன்னுடைய நவம்பர் 2010 விஜயத்தின்போது, மணி பவனுக்கு வருகை தந்தார். ஒபாமா கடந்த 50 ஆண்டுகளில் காந்தி சங்கராலயாவுக்கு வருகை தந்த முதல் சர்வதேச பார்வையாளர் ஆவார். [1] அவருக்கு முன், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மட்டுமே 1950 களில் மணி பவனுக்கு வருகை தந்திருந்தார். =

பார்வை நேரம்[தொகு]

மணி பவன் அருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வையாளர்கள் பார்வையிடும் வகையில் திறந்திருக்கும். இதே நேரத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நூலகமும் திறந்திருக்கும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மணி பவன் விடுமுறையாகும். இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு மணி நேரம் முதல் இரு மணி நேரம் வரை ஆகலாம். [2]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Obama visits symbols of peace in India". Gulf News. http://gulfnews.com/news/world/india/obama-visits-symbols-of-peace-in-india-1.707421. பார்த்த நாள்: 4 July 2011. 
  2. "Mani Bhavan". Archived from the original on 2019-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_பவன்,_மும்பை&oldid=3590637" இலிருந்து மீள்விக்கப்பட்டது