மணி திருநாவுக்கரசு முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணி சு. திருநாவுக்கரசு முதலியார் (1888 - 1931)[1] தமிழறிஞரும், நூலாசிரியரும் ஆவார்.

இவர் செங்கல்பட்டு மாவட்டம், மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சுந்தர முதலியார் என்பவரின் புதல்வர். இவர் பூவை கல்யாணசுந்தர முதலியார், மறைமலை அடிகள் ஆகியோரின் மாணாக்கர். கணக்குப்பிள்ளையாகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரானார்.[1]

செந்தமிழ்ச் செல்வி, தமிழரசு ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] தமிழர் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.[2]

நூல்கள்[தொகு]

 • பாவலர் ஆற்றுப் படை
 • அறநெறி விளக்கம்
 • புலவர் கதை
 • திருக்கண்ணப்பன்
 • குமணன்
 • இராசராசன்
 • சண்பகவல்லி
 • செந்தமிழ் வாசகம்

தொகுப்பு நூல்கள்[தொகு]

 • பாமணிக் கோவை
 • உரைமணிக் கோவை

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "அடிகளார் படிவ மலர் 1969". பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.
 2. "தமிழர் சங்கம் 07.07.1929". விடுதலை. Archived from the original on 2019-05-03. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.