மணிவாசகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிவாசகம் (Manivasagam, இறப்பு: 2001) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றினார்.[1]

தொழில்[தொகு]

மணிவாசகம் தனது திரைப்பட வாழ்க்கையை நம்ம ஊரு பூவாத்தா (1990) படத்திலிருந்து தொடங்கினார். அதைத் தோடர்ந்து கிராம அதிரடி நாடகப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். பெரும்பாலும் நடிகர் சரத்குமாருடன் பணிபுரிந்தார். இவர் அடிக்கடி சொந்தமாக படங்களைத் தயாரித்தார். மேலும் இவரது மனைவி ராஜேஸ்வரி மணிவாசகத்தை தலைமை தயாரிப்பாளராக குறிப்பிட்டார். இவரது படமான நாடோடி மன்னன் (1995) தோல்வியானது, இவரை படங்களை இயக்குவதில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருக்க வைத்தது. இவரது இறுதி படமான மாப்பிள்ளை கவுண்டர் (1997) படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக மோசமாக தோல்வியுற்றது.[2] மணிவாசகம் 2001 இல் இறந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அட்டகத்தி தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் இவரது மகன் காந்தி இயக்குநராக அறிமுகமானார்.[4]

திரைப்படவியல்[தொகு]

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
ஆண்டு படம் குறிப்புகள்
1990 நம்ம ஊரு பூவாத்தா
1991 வைதேகி கல்யாணம்
1992 பெரிய கவுண்டர் பொண்ணு
1992 பட்டத்து ராணி
1993 ராக்காயி கோயில்
1993 கட்டப்பொம்மன்
1994 ஜல்லிக்கட்டுக்காளை இயக்குனர்
1995 மருமகன் இயக்குனர்
1995 நாடோடி மன்னன்
1997 மாப்பிள்ளை கவுண்டர்
தயாரிப்பாளர்

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Archived copy". 24 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 October 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  3. http://www.cooljilax.com/2001/stat2001.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-04-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிவாசகம்&oldid=3707572" இருந்து மீள்விக்கப்பட்டது