மணிலா விரிகுடா
| மணிலா விரிகுடா | |
|---|---|
| Manila Bay | |
மணிலா விரிகுடாவின் செயற்கைக்கோள் புகைப்படம் (2016). | |
| அமைவிடம் | லூசோன், பிலிப்பீன்சு |
| ஆள்கூறுகள் | 14°31′00″N 120°46′00″E / 14.51667°N 120.76667°E |
| அதிகபட்ச நீளம் | 19 km (12 mi) |
| அதிகபட்ச அகலம் | 48 km (30 mi) |
| மேற்பரப்பளவு | 2,000 km2 (770 sq mi) |
| குடியேற்றங்கள் | மாலோலோசு; மணிலா |
மணிலா விரிகுடா (ஆங்கிலம்: Manila Bay; பிலிப்பினோ: Look ng Maynila; எசுப்பானியம்: Bahía de Manila}}) என்பது பிலிப்பீன்சு, லூசோன், மணிலா துறைமுகத்திற்கு (Port of Manila) சேவை வழங்கும் ஓர் இயற்கை துறைமுகமாகும். பிலிப்பீன்சு தலைநகரைச் சுற்றி உத்திசார் நிலையில் அமைந்துள்ள மணிலா விரிகுடா, பிலிப்பீன்சிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும்[1] இடையிலான வணிகம் மற்றும் வணிகம் தொடர்பான சமூக உறவுகளை எளிதாக்கியது. இந்த விரிகுடா எசுப்பானியர் வருகைக்கு முந்தைய காலத்திலிருந்தே சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான நுழைவாயிலாகவும் விளங்கியது.
1,994 சதுர கிமீ (769.9 சதுர மைல்) பரப்பளவும், 190 கிமீ (118.1 மைல்) நீளமுள்ள கடற்கரையையும் கொண்ட மணிலா விரிகுடா, லூசோனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த விரிகுடா கிழக்கே கவைட் மற்றும் மெட்ரோ மணிலா, வடக்கே புலகன் மற்றும் பம்பங்கா நிலப்பகுதியாலும், மேற்கிலும் வடமேற்கிலும் பட்டான் நிலப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது.[2] மணிலா விரிகுடா சுமார் 17,000 சதுர கிமீ (6,563.7 சதுர மைல்) நீர்ப்பிடிப்புப் பகுதியின் நீரைத் தன்னுள் கொண்டுள்ளது. இதில் பம்பாங்கா ஆறு (Pampanga River) மட்டுமே சுமார் 49% நன்னீரை வழங்குகிறது. 17 மீட்டர் (55.8 அடி) சராசரி ஆழத்தைக் கொண்டுள்ள இந்த வளைகுடா, மொத்தம் 28.9×10⁹ கன மீட்டர் (1,020×10⁹ கன அடி) நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விரிகுடாவின் நுழைவாயில் 19 கிமீ (11.8 மைல்) அகலத்தைக் கொண்டுள்ளது. அத்துடன், உள்ளே செல்லச் செல்ல 48 கிமீ (29.8 மைல்) அகலம் வரை விரிவடைகிறது. இருப்பினும், இந்த விரிகுடா அதன் முகத்துவாரத்தில் 22 கிமீ (13.7 மைல்) என்ற அளவில் தொடங்கி, அதன் அகலமான பகுதியில் 60 கிமீ (37.3 மைல்) வரை மாறுபட்டு விரிவடைகிறது.[2] விரிகுடாவின் இருபுறமும் வெப்பமண்டலத் தாவரங்களால் சூழப்பட்ட எரிமலைச் சிகரங்கள் உள்ளன: வடக்கே 40 கிமீ தொலைவில் பட்டான் தீபகற்பமும், தெற்கே கவைட் மாகாணமும் அமைந்துள்ளன.
வரலாறு
[தொகு]1898-ஆம் ஆண்டு நடைபெற்ற மணிலா விரிகுடா போர் (Battle of Manila Bay) இந்த விரிகுடா களமாக அமைந்தது. இந்தப் போரில் அமெரிக்கப் படைகள் இப்பகுதியைக் கைப்பற்றின. அமெரிக்காவின் கடற்படை வலிமையை இப்போர் உலகிற்குப் பறைசாற்றியது. இதில் எசுப்பேனியாவின் அனைத்து முக்கிய போர்க் கப்பல்களும் அழிக்கப்பட்டு, அமெரிக்கர்களால் கைப்பற்றப்பட்டன.[3]
1905-ஆம் ஆண்டில் நடைபெற்ற உருசிய-சப்பானியப் போரின் இறுதியில், சுசிமா போரின் (Battle of Tsushima) முடிவில் தப்பிய மூன்று உருசிய போர்க்கப்பல்கள் பழுதுபார்ப்புகளுக்காக அப்போதைய அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த மணிலா துறைமுகத்தை வந்தடைந்தன. இருப்பினும், இந்த மோதலில் அமெரிக்கா நடுநிலை வகித்ததால், அந்த மூன்று போர்க்கப்பல்களும் அவற்றின் பணியாளர்களும் செப்டம்பர் 1905-இல் போர் முடிவுக்கு வரும் வரை அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் போது, மணிலா விரிகுடாவைத் தளமாகக் கொண்ட சப்பானியப் படைகளால் கொரெசிடோர் தீவு (Corregidor Island) கைப்பற்றப்பட்டது. இதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த கடற்படைத் தளத்திலிருந்து பல்வேறு போர்கள் நடத்தப்பட்டன. இதில் 1646-இல் நடந்த லா நாவல் டி மணிலா போர்களும் (Battles of La Naval de Manila) அடங்கும். இப்போர்கள் பிலிப்பீன்சைக் கைப்பற்றுவதற்கான இடச்சுக்காரர்களின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
காட்சியகம்
[தொகு]மணிலா விரிகுடா காட்சிப் படங்கள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jacinto, G.S., Azanza, R.V., Velasquez, I.B. and Siringan, F.P.(2006)."Manila Bay:Environmental Challenges and Opportunities" in Wolanski, E.(ed.) The Environment in Asia Pacific Harbours. Springer: Dordrecht, Netherlands. p309-328.
- 1 2 Jacinto, G.S., Velasquez, I.B., San Diego-McGlone, M.L., Villanoy, C.L. and Siringan, F.B.(2006)."Biophysical Environment of Manila Bay - Then and Now", in Wolanski, E.(ed.)The Environment in Asia Pacific Harbours. Springer: Dordrecht, Netherlands. p. 293-307.
- ↑ de Castro, J.A.I. (2010). "Cleaning Up Manila Bay: Mandamus as a Tool for Environmental Protection". Ecology Law Quarterly. (37) pp 797-804
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Manila Bay தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Fort Drum:Concrete Battleship of the Philippines
- Biophysical environment of Manila Bay – Then and now