உள்ளடக்கத்துக்குச் செல்

மணிலா அகத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிலா அகத்தி பிலிப்பீன்சு நாட்டில் உள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1985 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

விவரிப்பு

[தொகு]

மணிலா அகத்தி மரவியல்புடன் குத்துநிலையாக முரடான ஆண்டு அல்லது குறும்பருவத் தாவரமாக அனைத்துப் பருவங்களிலும்1 முதல் 3மீ உயரம் வளரும்;இதன் தண்டு 15 மிமீ தடித்து நுண் மயிரிழைகளோடிருக்கும்; இலைகள் இணைநிலைக் கூட்டிலைகளாக 12 முதல் 22 வரையிலான சிற்றிலைகளோடு அமையும். கூட்டிலைகள் 7 முதல் 25 செமீ நீளவரை அமையும். கூட்டிலைக் காம்பில் 3 முதை 14 மலர்கள உள்ள பூங்கொத்து இருக்கும். பூக்கள்மஞ்சள் நிறமாக இருக்கும்மிதில் இருபுற வெடிக்கனி திருகலாக 15 முதல்22 செமீ நீளத்துக்கு அமையும். விதைகள் சிறிய உருளயான வெளிர்த்த முதல் கறுத்தது வரையிலான பழுப்பு நிறத்தில் அமையும்.[2][3]

பசுமை உரம்

[தொகு]

இது வேர்ப்பாகத்திலும், தண்டு பாகத்திலும் வேர் முடிச்சுக்களைக் கொண்டுள்ளதால் காற்றிலிருந்து தழைச்சத்தினை உறிஞ்சி நெல் பயிருக்குத் தரும்.கோடையில் இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது ஒரு பசுந்தாள் உரமாக பயன்படுவதால் நெல் வயலில் 60 நாள் முன்பாகவே விதைத்து பூ வரும் சமயத்தில் மண்ணில் மடக்கி உழ வேண்டும். இதனால் செயற்கை உரம் போடுவதை குறைத்துக் கொள்ளலாம். இயற்கை வேளாண்மைக்கு இது ஒரு நல்ல வளமாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Agriculture". agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
  2. Cook, B.G., Pengelly, B.C., Brown, S.D., Donnelly, J.L., Eagles, D.A., Franco, M.A., Hanson, J., Mullen, B.F., Partridge, I.J., Peters, M., & Schultze-Kraft, R. (2005). Tropical Forages: an interactive selection tool. Retrieved from http://www.tropicalforages.info/ey/Forages/Media/Html/Sesbania_rostrata.htm (Date accessed: November 19, 2013).
  3. Orwa C, Mutua A, Kindt R, Jamnadass R., & Simons A. (2009a) Agroforestree Database: a tree reference and selection guide version 4.0. World Agroforestry Database. Retrieved from http://www.worldagroforestry.org/treedb2/AFTPDFS/Sesbania_rostrata.pdf (Date accessed: November 17, 2013).
  4. சி.முரளிதரன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அறிவியல் நிலையம், திருர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிலா_அகத்தி&oldid=3918401" இலிருந்து மீள்விக்கப்பட்டது