மணிலால் வகேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிலால் வகேலா
குஜராத் சட்டமன்றத்தின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2012–2017
பின்னவர்ஜிக்னேஷ் மேவானி
தொகுதிவட்கம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2021 வரை)
பாரதிய ஜனதா கட்சி (2022-தற்போது வரை)

மணிலால் ஜெதாபாய் வகேலா (Manilal Vaghela) குஜராத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக வகேலா 2012ஆம் ஆண்டில் வட்காமிலிருந்து குஜராத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் வடகாமிலிருந்து சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மேவானியை இந்திய தேசிய காங்கிரசு ஆதரித்தபோது, இவர் இடார் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிடக் கேட்டுக்கொள்ளப்பட்டார். இங்கு இவர் தோற்கடிக்கப்பட்டார். இவர் நவம்பர் 2021-ல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகினார். ஏப்ரல் 2022-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ex-Congress MLA Manilal Vaghela joins BJP ahead of Gujarat Assembly polls" (in en-IN). The Hindu. 2022-04-24. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/ex-congress-mla-manilal-vaghela-joins-bjp-ahead-of-gujarat-assembly-polls/article65350914.ece. 
  2. "Arundhati Roy: Arundhati Roy donates Rs 3 lakh to Jignesh Mevani's campaign". The Times of India. 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிலால்_வகேலா&oldid=3452891" இலிருந்து மீள்விக்கப்பட்டது