மணிலால் நாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணிலால் நாக்
Pandit Manilal Nag.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு16 ஆகத்து 1939
பாங்குரா, இந்தியா
இசை வடிவங்கள்இந்தியப் பாரம்பரிய இசை
இசைக்கருவி(கள்)சித்தார்

பண்டிட் மணிலால் நாக் (Manilal Nag) (பிறப்பு: 1939 ஆகத்து 16 [1] ) இந்தியப் பாரம்பரிய சித்தார் கலைஞரும், வங்காளத்தின் பிஷ்ணுபூர் கரானாவின் (பள்ளி) நிபுணருமாவார். இவருக்கு 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [2] [3] [4]

பயிற்சியும் தொழிலும்[தொகு]

நாக், இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாங்குராவில் பிறந்தார். இவரது தந்தை கோகுல் நாக் இவருக்கு சித்தார் வாசிக்க கற்றுக் கொண்டார். [5] இவர் 1953 அகில இந்திய இசை மாநாட்டில் கைம்முரசு இணைக் கலைஞர் சம்தா பிரசாத்துடன் இணைந்து தனது முதல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் 1954 முதல் தேசிய இசை நிகழ்ச்சி மற்றும் ஆகாசவானி சங்கீத மாநாட்டில் பல முறை நிகழ்ச்சியினை வழங்கி வருகிறார்.

1973 ஆம் ஆண்டில் இந்திய அரசின் கலாச்சாரா உறவுக்களுக்கான அமைப்பு மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். ஆத்திரேலிய அரசாங்கத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1979 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் கலை விழாவில் பங்கேற்பதற்கான பிரதிநிதியாக இந்திய அரசாங்கத்தால் ஆத்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டார்.

2005 முதல் 2011 வரை ஐடிசி இசை ஆராய்ச்சி அகாதமியின் கருவி இசைப் பிரிவில் இணைக்கப்பட்டார். [6]

விருதுகள்[தொகு]

2001 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதையும், 2005 ஆம் ஆண்டில் இந்தியாவின் கலாச்சார அமைச்சகத்திடமிருந்து மூத்த கூட்டாளர் விருதையும், 2008 இல் கொல்கத்தாவின் ஆசியச் சமூகத்திலிருந்து கௌரவ தங்கப் பதக்கத்தையும் பெற்றார். மேற்கு வங்க அரசு இவருக்கு 2012 இல் அலாவுதீன் புரஸ்கார் மற்றும் 2015 இல் பங்கா பிபுசண், அதே போல் சங்கீத மகாசம்மான் விருதையும் வழங்கியது. ஐ.டி.சி. சங்கீத சம்மான், தோவர்லேன் சங்கீத சம்மான், சண்டிகர், பிரசீன் கலா கேந்திராவின் கோசர் விருது, மும்பையின் சங்கீத ரத்னா விருது, புதுதில்லியில் இருந்து விட்டாஸ்டா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிலால்_நாக்&oldid=3094375" இருந்து மீள்விக்கப்பட்டது