உள்ளடக்கத்துக்குச் செல்

மணிலால் திவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிலால் திவேதி
Manilal Dwivedi
பிறப்புமணிலால் நபுபாய் திவேதி
(1858-09-26)26 செப்டம்பர் 1858
நாடியாத், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு1 அக்டோபர் 1898(1898-10-01) (அகவை 40)
நாடியாத், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
தொழில்
  • எழுத்தாளர்
  • மெய்யியலாளர்
  • சமூகச் சீர்த்திருத்தவாதி
மொழிகுஜராத்தி
தேசியம் இந்தியா
கல்விஇளங்கலை
கல்வி நிலையம்எல்பின்ஸ்டோன் கல்லூரி (1877–1880; இளங்கலை)
காலம்குஜராத்தி இலக்கியம் (கி.பி.1850 – நவீன காலம் வரை) (பண்டிட் யுகம்)
செயற்பட்ட ஆண்டுகள்1876–1898

மணிலால் நபுபாய் திவேதி (Manilal Nabhubhai Dwivedi) (செப்டம்பர் 26,1858-அக்டோபர் 1,1898) ஓர் [[குஜராத்தி] மொழி எழுத்தாளரும், தத்துவஞானியும் மற்றும் பிரித்தானிய இந்தியாவைச் சேர்ந்த சமூக சிந்தனையாளரும் ஆவார். பொதுவாக இலக்கிய வட்டாரங்களில் மணிலால் என்று குறிப்பிடப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் குஜராத்தி இலக்கியத்தில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த இவர், சமூக சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் ஈடுபட்ட பல குஜராத்தி எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களில் ஒருவராக இருந்தார், பெண்களின் நிலை, குழந்தைத் திருமணம் மற்றும் விதவைகள் மறுமணம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார். இவர் கிழக்கத்திய நாகரிகத்தை உயர்ந்த மதிப்பில் வைத்திருந்தார், மேலும் மேற்கத்திய நாகரிகத்தின் செல்வாக்கை எதிர்த்தார். இது அவரை குறைவான பழமைவாத கண்ணோட்டமுள்ள பிற சமூக சீர்திருத்தவாதிகளுடன் மோதல்களுக்குள் ஈர்த்தது. இவர் தன்னை ஒரு "மத அடிப்படையில் சீர்திருத்தவாதி" என்று கருதினார்.[1]

மணிலால் 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் பம்பாய் மாநாட்டிற்கு நாடியாத் நாடியாத்திலிருந்து ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1890 ஆம் ஆண்டில் கேதா மாவட்ட காங்கிரசு கட்சிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1891 முதல் 1893 வரை நாதியாத் நகராட்சிப் பள்ளிக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[2]

இறப்பு

[தொகு]

மஞ்சள் காமாலை மற்றும் நுரையீரல் அழற்சியால் பதிக்கப்படிருந்த இவர் அக்டோபர் 1,1898 அன்று இறந்தார்.[3] 

தத்துவமும் சமூக சீர்திருத்தமும்

[தொகு]

மணிலால் அத்வைதத்தைப் பின்பற்றுபவராக இருந்தார்.[4][5][6] சுயமும் கடவுளும் எந்த வகையிலும் வேறுபட்டவை அல்ல என்று நம்பினார், மேலும் பகவத் கீதை அத்வைதத்தின் தத்துவ முன்னோடியாக இருப்பதை விட இந்த கண்ணோட்டத்தை கற்பிக்கிறது என்று வாதிட்டார்.[மேல்-ஆல்பா 5].[4]

அடிக்குறிப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shukla 1995, ப. 90.
  2. Thaker 1983, ப. 33.
  3. Thaker 1983, ப. 38.
  4. 4.0 4.1 Yajnik 1979, ப. 91–92.
  5. Dasgupta 1975, ப. 50.
  6. Ram-Prasad 2013, ப. 231.

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிலால்_திவேதி&oldid=4137332" இலிருந்து மீள்விக்கப்பட்டது