மணிரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணிரங்கு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்று. இது 22வது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

மணிரங்கு ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
மணிரங்கு அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சாதாரண காந்தாரம் (க2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ரி21 ப நி2 ச்
அவரோகணம்: ச் நி2ப ம12 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சாடவ" இராகம் எனப்படுகின்றது.

உருப்படிகள்[2][தொகு]

வகை பாடல் தாளம் கலைஞர்
வர்ணம் சலவலச்சி திஸ்ர ஏகம் பல்லவி சேசய்யர்
கிருதி ரானிடி ராது ஆதி தியாகராஜர்
கிருதி மாமவ மிச்ரசாபு முத்துசுவாமி தீட்சிதர்
கிருதி எப்படிக் கேட்டாலும் ரூபகம் கோபாலகிருஷ்ண பாரதியார்
கிருதி சித்தம் இரங்கி திரிபுடை வேதநாயகம் பிள்ளை
கிருதி இனி சுமக்க மிச்ரசாபு முத்துத்தாண்டவர்
கிருதி சுந்தரேஸ்வரநீயே ரூபகம் பாபநாசம் சிவன்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Music Handbook - Raga Index -M 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. பக்கம் எண்கள்: 155 & 156, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிரங்கு&oldid=1787891" இருந்து மீள்விக்கப்பட்டது