மணியன் (இதழாளர்)
மணியன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இதழாளர் ஆவார். வேங்கடசுப்பிரமணியன் என்ற இயற்பெயரை உடைய இவர்[1] ஆனந்த விகடன் இதழில் தலைமை உதவியாசிரியராகப் பணியாற்றியவர். [2] அவ்விதழில் இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் தனது பயணக்கட்டுரைகளை எழுதினார்.[1] பின்னர் இதயம் பேசுகிறது என்ற அப்பெயரிலேயே கிழமை இதழ் ஒன்றை 1979ஆம் ஆண்டில் தொடங்கினார்.[3]
புதினங்கள்
[தொகு]மணியன் ஆனந்தவிகடன், இதயம் பேசுகிறது ஆகிய இதழ்களில் தொடர்கதைகள் பலவற்றை எழுதினார்.[1] அவற்றுள் சில:
- ஆண்மனம், 1984, இதயம் பேசுகிறது இதழில் வெளிவந்த தொடர் - 53 அத்தியாயங்கள்
- ஆசை வெட்கமறியும்...
- இதயச்சுரங்கம்
- இதயவீணை
- இலவுகாத்த கிளி (நடிகை சந்திரகாந்தாவின் சிவகாமி கலை மன்றத்தாரால் நாடகமாக நடிக்கப்பட்டது)
- உண்மைசொல்ல வேண்டும்
- உன்னை ஒன்று கேட்பேன்
- என்றும் உன்னுடைய
- என்னைப்பாடச் சொன்னால்
- என்ன பாடத்தோன்றும்?
- என்ன சுகம்? என்ன சுகம்?
- காதலித்தால் போதுமா? (முதல் தொடர்கதை); 1962 ஆனந்தவிகடன்
- சுஜாதா
- தேன்சிந்தும் மலர்
- நினைவு நிலைக்கட்டும் (இதயமலர் என்ற பெயரில் திரைப்படமானது)
- நீரோடை; 1990
- நெஞ்சோடு நெஞ்சம்; மு.பதிப்பு 1973 மார்ச்சு 3, இ.பதிப்பு 1980; சென்னை, பழனியப்பா பிரதர்சு; பக்.xii+292.
- மோகம் முப்பது வருஷம்
- லவ் பேர்ட்ஸ் (குமாரி பிரேமலதா என்னும் பெயரில் எழுதினார்)
- வாழ்த்தும் நெஞ்சங்கள்
திரைப்படங்கள்
[தொகு]மணியன் வித்துவான் வே. லட்சுமணனுடன் இணைந்து உதயம் புரொடக்சன்சு என்ற பெயரில் திரைப்படங்களைத் தயாரித்தனர். அவற்றுள சில: [4]
- இதய வீணை 1972; உதயம் புரொடக்சன்சு.
- இலவு காத்த கிளி; உதயம் புரொடக்சன்சு.
- இதயமலர்; 1976; உதயம் புரொடக்சன்சு.
- சிரித்து வாழ வேண்டும்; 1974; உதயம் புரொடக்சன்சு.
- பல்லாண்டு வாழ்க; 1975; உதயம் புரொடக்சன்சு.
- மோகம் முப்பது வருஷம் 1976; சொர்ணாம்பிகா புரொடக்சன்சு.
பயணக்கதைகள்
[தொகு]மணியன் முதன்முறையாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் அழைப்பின்பேரில் 1966ஆம் ஆண்டில் இங்கு சென்றார். அப்பயண அனுபவத்தை ஆனந்த விகடன் இதழில் 'இதயம் பேசுகிறது' என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. [5] அதன் பின்னர் அவர் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றார். அவற்றைப்பற்றி வரிசையாக 'இதயம் பேசுகிறது' என்ற பெயரிலேயே தொடர்கள் எழுதினார். அவை நூல்களாக வெளிவந்தன.
- இதயம் பேசுகிறது (அமெரிக்கா, பிரிட்டன் பயணக்கதை), முதல் பதிப்பு 1968 ஆகத்து. பக்கங்கள் 336; வாசன் என்டர்பிரைஸஸ் வெளியீடு
- இதயம் பேசுகிறது II சப்பானிய பயணக்கதை, முதற்பதிப்பு 1972; பக்கங்கள் 168; வாசன் என்டர்பிரைஸஸ் வெளியீடு
- இதயம் பேசுகிறது IIஅ சிங்கப்பூர், மலேசியா, ஆசுதிரேலியா பயணக்கதை
- இதயம் பேசுகிறது III ஐரோப்பிய பயணக்கதை
- இதயம் பேசுகிறது IV உருசிய பயணக்கதை
- இதயம் பேசுகிறது V ஆப்ரிக்க பயணக்கதை
- இதயம் பேசுகிறது VI வியட்நாம் பயணக்கதை
- இதயம் பேசுகிறது VII மேற்கு ஆப்ரிக்க பயணக்கதை
- இதயம் பேசுகிறது VIII இந்தோனேசிய பயணக்கதை; 1976 மே; ஆனந்தவிகடன், சென்னை.
- இதயம் பேசுகிறது IX தென்னமெரிக்க பயணக்கதை
- இதயம் பேசுகிறது X மெக்சிகோ பயணக்கதை
- இதயம் பேசுகிறது XI இலங்கைப் பயணக்கதை; 1979 ஏப்ரல்; மணியன் பதிப்பகம், 7, அனுமந்தராவ் சாலை, பாலாசி நகர், சென்னை 14; பக்.120.
- இதயம் பேசுகிறது XII
- இதயம் பேசுகிறது XIII
- இதயம் பேசுகிறது XIV
- இதயம் பேசுகிறது XV நேப்பாளப் பயணக்கதை
இதழ்கள்
[தொகு]மணியன் பல்வேறு இதழ்களை வெளியிட்டார். அவற்றுள் சில:
- இதயம் பேசுகிறது [6]
- ஞானபூமி: இந்துமதம் பற்றிய மாத இதழ். 1985இல் வெளிவந்தது.
- இதயம் சிறுகதை களஞ்சியம்: தாமரைமணாளனை ஆசிரியராகவும் மணியனை வெளியிடுபவராகவும் பதிப்பாசிரியராகவுங்கொண்டு 1985-86ஆம் ஆண்டில் வெளிவந்த மாதஇதழ்.[6]
- பாலசோதிடம்
- மணியன் மாத இதழ்
- மயன் [6]