மணிமேகலை (1959 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிமேகலை (Manimekalai) வி. எஸ். ராகவன் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். மகாலிங்கம், பானுமதி மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. எஸ். நாராயணன் தயாரிப்பில், ஜி. ராமநாதன் இசை அமைப்பில், 9 ஏப்ரல் 1959 ஆம் தேதி வெளியானது.[1]

நடிகர்கள்[தொகு]

டி. ஆர். மகாலிங்கம், பி. பானுமதி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், காக்கா ராதாகிருஷ்ணன், செருகளத்தூர் சாமா, தேவர், சி. எஸ். பாண்டியன், சந்தியா, டி. வி. குமுதினி

கதைச் சுருக்கம்[தொகு]

கோவலன், மாதவி தம்பதியினரின் மகள் மணிமேகலை (பி. பானுமதி) ஆவாள். மணிமேகலை இசையையும் ஆட்டத்தையும் கற்றவள். கோவலனின் மறைவிற்கு பின்னர், ஆன்மிகம் நிறைந்த சூழ்நிலையில் மணிமேகலையை வளர்த்தாள் மாதவி.

மணிமேகலையின் அழகில் மயங்கி, அவள் வசம் காதல் கொள்கிறான் இளவரன் உதய குமரன் (தெ. இரா. மகாலிங்கம்). ஆனால், காவேரிப்பூம்பட்டினத்திலிருந்து, நாக நாட்டின் தெந்தீவான மணிபல்லவத்திற்கு கடல் தேவதையால் அழைத்துச் செல்லப்படுகிறாள் மணிமேகலை. அந்தத் தீவில், முன் பிறப்பைப் பற்றி அறிந்து கொள்ளும் தர்ம அமர்வின் மூலமாக, தன் முன் பிறப்பைப் பற்றி அறிகிறாள் மணிமேகலை. அவள் புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், உதய குமரன் தான் தன் கடந்த பிறவியின் கணவன் என்றும் அவளுக்கு தெரியவருகிறது. மேலும், உருமாறும் கலையையும் கற்கிறாள் மணிமேகலை.

புத்த மதத்தின் கோட்பாடுகளை தீவதிலகையின் மூலமாக கற்கிறாள் மணிமேகலை. பின்னர், அங்கே இருக்கும் ஒரு குளத்திரலிருந்து ஒரு கிண்ணம் அவளுக்கு கிடைக்கிறது. அது தான் அமுதசுரபி - உலகத்தின் பசியை போக்கும் வல்லமைக் கொண்டது. பின்னர், கடல் தேவதையின் உதவியுடன், மீண்டும் காவேரிப்பூம்பட்டினத்திற்கு திரும்பும் மணிமேகலை, தனக்கு நடந்த சம்பவங்களை தன் தாய் மாதிவிக்கு விளக்குகிறாள்.

அமுதசுரபியின் வரலாற்றையும் மகிமையையும் தெரிந்துகொண்ட மணிமேகலை, ஏழைகளின் பசையைப் போக்க அமுதசுரபி கிண்ணத்தை பயப்படுத்துகிறாள். இளவரசன் உதய குமரன் தொடர்ந்து மணிமேகலையை அடைய முயற்சி செய்கிறான். பின்னர் என்னவானது என்பது தான் மீதிக் கதையாகும்.[1]

ஒலிப்பதிவு[தொகு]

ஜி. ராமநாதன் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். தஞ்சை. என். ராமையா தாஸ், ஏ. மருதகாசி, கம்பதாசன், கண்ணதாசன் ஆகியோர் இப்படத்தின் பாடலாசிரியர்கள் ஆவர்.

தயாரிப்பு[தொகு]

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை என்ற காப்பியத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "www.dhool.com". Archived from the original on 2018-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி-இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமேகலை_(1959_திரைப்படம்)&oldid=3720763" இலிருந்து மீள்விக்கப்பட்டது