உள்ளடக்கத்துக்குச் செல்

மணிப்புரிய இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்தி இலக்கியம்
(மணிப்புரிய இலக்கியம்)
பண்டைய மெய்தி புராணம் மற்றும் மதத்தை (சனமாகியம்) அடிப்படையாகக் கொண்டு, முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பாரம்பரிய மெய்தி காவிய உரையான நுமித் கப்பா.

மணிப்பூரி இலக்கியம் (Manipuri literature) என்றும் அழைக்கப்படும் மெய்தி இலக்கியம் மணிப்பூரின் மணிப்புரிய மொழியில் எழுதப்பட்ட இலக்கியமாகும். பிற்காலத்தில் பண்டிட் லோய்ஷாங் என்று அழைக்கப்பட்ட இலுவாங் நோங்கும்சாங் என்ற ஒரு பண்டைய கல்வி நிறுவனம்18 ஆம் நூற்றாண்டு வரை பூர்வீக மெய்தி அறிவு மற்றும் தத்துவத்தின் ஆதாரங்களை சேகரித்தது.[1] மணிபுரிய எழுத்கள் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கங்கலீபாக் இராச்சியத்ல் செலுப்பாக இருந்ததாகக் கருதப்படுகிறது. மெய்தி எழுத்து ஒரு பிராமிய குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட புயா கையெழுத்துப் பிரதிகளில் இருந்து மட்டுமே இது அறியப்படுகிறது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் கையெழுத்துப் பிரதிகள் வங்காள எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டன. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்பி கியாம்பா ஆட்சிகாலத்தில் மெய்தி எழுத்துகள் இருந்திருப்பது அறியப்படுகிறது. முதல் அச்சிடப்பட்ட மணிப்புர இதிகாசம் என்ற நூல் 1890 ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் பாப்டிஸ்ட் மிஷன் பிரஸ் என்ற பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. மணிப்பூர் மன்னர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆங்கிலேயர்களுடன் தொடர்பை கொண்டிருந்தாலும், தொடர்புகளின் உண்மையான தாக்கம் மிகவும் பிற்காலத்திலேயே ஏற்பட்டது. மேற்கத்திய கல்வி முறையை அடிப்படையாகக் கொண்ட ஜான்ஸ்டோன் நடுத்தர ஆங்கிலப் பள்ளி 1885 ஆம் ஆண்டில் இம்பாலில் தொடங்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டில் மணிப்பூரை ஆங்கிலேயர்கள் அடைமைப்படுத்தினர். பிரித்தானிய ஆதிக்கம் குடிமை, அரசியல் மற்றும் கல்வி போன்ற துறைகளில் புதிய அமைப்புகளை அறிமுகப்படுத்த உதவியது. இது மணிப்பூரில் நவீனமயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்தியது, இது புதிய கருத்துக்கள் மற்றும் தாக்கங்களுக்கு வித்திட்டது.[2]

பண்டைய மெய்தி இலக்கியம்

[தொகு]

சாதா லாயிஹுய்

[தொகு]

சாதா லாயிஹுய் என்பது மணிப்பூர் மன்னர்களின் தாய்வழியிலிருந்து வந்த வம்சாவளியைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணம் ஆகும்.[3][4] இது மன்னர்களின் வம்சாவளியைப் பற்றி விரிவாக பேசுகிறது.[3][4][5][6] மேலும், இது மணிப்பூரின் முன்னணி அரச சரித்திரமான சீதாரோல் கும்பாபா என்பதின் துணை ஆவணமாகும்.[3]

மொய்ராங் நிங்தோரோல் லம்பூபா

[தொகு]

"மொய்ராங் நிங்தோரோல் லம்பூபா" என்பது பண்டைய மொய்ராங் இராச்சிய ஆட்சியாளர்களின் அரசவை வரலாற்றை பதிவு செய்துள்ளது.[7][8][9]

நவீன மெய்தி இலக்கியம்

[தொகு]

புயாக்கள்

[தொகு]

புயாக்கள் என்பது மணிப்புரிய எழுத்துகளால் எழுதப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதி ஆகும்.[10] இவை மதம், புராணங்கள், சரித்திரம், மெய்தி மக்களின் நாட்டுப்புற மருத்துவம், வரலாறு போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.[11] 18 எழுத்துக்களைக் கொண்ட தொன்மையான மெய்டெய் எழுத்து, வகோக்லோன் புயாவிலிருந்து பெறப்பட்டது. புயா கையெழுத்துப் பிரதிகள் 1930களில் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[12][13][14][15][16] 14 ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து அரச திருமணங்கள் மூலம் இந்துக்கள் வந்ததாக புயா வரலாறுகள் கூறுகின்றன. அவை இப்போது நவீன அசாம், வங்காளம், உத்தரப்பிரதேசம், திராவிட இராச்சியங்கள் மற்றும் பிற பிராந்தியங்களிலிருந்து வந்தவை.[16] மற்றொரு கையெழுத்துப் பிரதி, 17 ஆம் நூற்றாண்டில், தற்போதைய வங்காளதேசத்திலிருந்து, மன்னர் ககெம்பாவின் ஆட்சியின் போது முஸ்லிம்கள் மணிப்பூருக்கு வந்ததாக கூறுகிறது.[16] சீதாரோல் கும்பபா மற்றும் நிங்தோரோல் லம்புபா போன்ற பிற புயாக்கள் மணிப்பூர்-பர்மா போர்களின் தொடர்ச்சியான மற்றும் பேரழிவை ஆவணப்படுத்துகின்றன.[17]

கரீப் நவாஸ் உத்தரவின் பேரில் எரிக்கப்படும் புயாவின் சித்தரிப்பு

கரிப் நவாஸ் (கிபி.1717) தலைமையில் இந்து மதம் அரசு மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, 1729 [1] அல்லது 1732 ஆம் ஆண்டில் அரச உத்தரவின் பேரில் காங்லா உத்ராவில் புயாக்கள் முற்றிலும் எரிக்கப்பட்டன.[18][19]

20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட புயா கையெழுத்துப் பிரதிகள் கரீப் நவாஸின் ஆட்சியின்போது எரிக்கப்பட்ட நூல்களுடன் ஒரு மெல்லிய தொடர்பைக் கொண்டுள்ளன.[20] இந்து மற்றும் சைனப் புராணங்களைப் போலவே, தற்போதுள்ள புயாக்களிலும் அண்டவியல், தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் வம்சாவளி மற்றும் அரச வரலாறுகள் உள்ளன.[20]

காவியங்கள்

[தொகு]

நுமித் கப்பா (சூரியனை சுடுதல்) என்பது கதை வசனத்தில் உள்ள ஒரு புராண உரை ஆகும். இது டி. சி. ஹோட்சன் (1908) என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டது. நவீன மெய்தி மொழியில் 1908 இல் வெளியிடப்பட்டது.

இரண்டு தெய்வீக காதலர்களின் ஏழு அவதாரச் சுழற்சிகளின் இதிகாசங்கள் பண்டைய காங்லீபக்கில் (மணிப்பூரின் ஆரம்பகாலம்) லோக்டாக் ஏரியின் கரையோரத்தில் அமைந்திருந்த மொய்ராங் இராச்சியத்திலிருந்து தோன்றின. அவற்றில், கம்பா தோய்பி கடைசி மற்றும் மிகப்பெரிய காவியமாகக் கருதப்படுகிறது..[21] இந்த கவிதையை சாமுரோவின் புகழ்பெற்ற கவிஞர் இஜாம் அங்கங்கால் என்பவர் இயற்றியுள்ளார். இது மணிப்பூரியின் தேசிய காவியமாக கருதப்படுகிறது.    34,000 வசனங்களைக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பு மேதி இலக்கியத்தில் உள்ள அனைத்து காவியக் கவிதைகளிலும் மிகப் பெரியதாகும். இது, இராமாயணத்தை விடவும் பெரியது.

காலவரிசைகள்

[தொகு]

நிங்தூரோல் ஷிங்காக் என்பது கரிப் நவாஸால் எழுதப்பட்டது. இது காகெம்பாவின் (ஆட்சி. 1597–1652) ஆட்சியின் போது செய்யப்பட்ட "கணிப்புகள்" முறையில் எழுதப்பட்டது. இது கரிப் நவாஸின் பிறப்பு மற்றும் ஆட்சி மற்றும் அவரது மத சீர்திருத்தங்களை முன்னறிவிக்கிறது. சீத்தரோல் கும்பாபா அல்லது "அரச நாளேடுகள்" என்பது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பர்மிய படையெடுப்பிற்குப் பிறகு ஆட்சி செய்த மன்னர் ஜெய் சிங்கைப் பற்றி எழுதப்பட்ட ஒரு உரையாகும். இதன் பிரதி இப்போது கிடைக்கவில்லை. இதில் அரசனது அன்றாட பரிவர்த்தனைகள் மற்றும் மாநில நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

வேதவாக்கியங்கள்

[தொகு]

மெய்தி வேதங்கள் என்பது மெய்தி மதம் (சனமாகியம்) மற்றும் புராணம் தொடர்பான நூல்களாகும். அவை மெய்தி மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு புனித இலக்கியமாக உள்ளது. [1] சில புயாக்கள் வேதங்களாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவை அனைத்தும் அல்ல.

சனமாகியம்

[தொகு]
சனமாகியம்[22][23]
சனமாகிய சமயத்தின் சின்னம்
வகைப்பாடு ஆவியுலகக் கோட்பாடு
இறையியல் பல கடவுட் கொள்கை
புவியியல் பிரதேசம்  இந்தியா

மெய்டேய் மதம் (சனமாஹிசம்) மற்றும் மெய்டேய் புராணங்கள் பற்றிய நூல்கள் ஆகும். அவை மெய்டேய் மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு புனிதமான இலக்கியங்கள். [24] சில புயாக்களும் வேதங்களாகக் கருதப்படுகின்றன.[25]

இலக்கிய விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Akademi | Hasta in Manipuri – Part 1". Akademi (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-02. Retrieved 2020-11-18.
  2. George, K. M. (1992). Modern Indian Literature, an Anthology: Surveys and poems (in ஆங்கிலம்). Sahitya Akademi. ISBN 978-81-7201-324-0.
  3. 1 2 3 Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo (in ஆங்கிலம்). Sahitya Akademi. ISBN 978-81-260-1803-1.
  4. 1 2 International Journal of Dravidian Linguistics: IJDL (in ஆங்கிலம்). Department of Linguistics, University of Kerala. 2011.
  5. Commission, Indian Historical Records (1973). Proceedings of the Session (in ஆங்கிலம்). Superintendent Government Printing, India.
  6. Documents of Anglo-Manipur War, 1891 (in ஆங்கிலம்). N. Debendra Singh. 1991.
  7. Indian Literature. Sahitya Akademi. 1984.
  8. Medieval Indian Literature: An Anthology. Sahitya Akademi. 1997. ISBN 9788126003655.
  9. "Moirang Ningthourol Moirang and Ebuthou Thangjing Part 6". e-pao.net. Retrieved 2023-02-18.
  10. Parratt, Saroj Nalini (2005-04-01). The Court Chronicle of the Kings of Manipur: Volume 1, The Cheitharon Kumpapa (in ஆங்கிலம்). Routledge. p. 10. ISBN 9780415344302.
  11. Kshetrimayum, Ibohal (2013). "Father, What Have You Done!". Indian Literature 57 (1 (273)): 106–109. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5804. https://www.jstor.org/stable/43856715.
  12. Noni, Arambam; Sanatomba, Kangujam (2015-10-16). Colonialism and Resistance: Society and State in Manipur (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-317-27066-9.pp-222-223
  13. Sohini Ray (2009). "Writing the Body: Cosmology, Orthography, and Fragments of Modernity in Northeastern India". Anthropological Quarterly 82 (1): 129–154. doi:10.1353/anq.0.0047. பன்னாட்டுத் தர தொடர் எண்:1534-1518. http://dx.doi.org/10.1353/anq.0.0047.
  14. Devi, Nunglekpam Premi (2018-05-25). Short Essays on Women and Society: Manipuri Women through the Century (in ஆங்கிலம்). FSP Media Publications.
  15. FS Downs (1979). Indian Church History Review: Missionaries and Manuscripts. Vol. 13. Church History Association. pp. 159–163, 167–168.
  16. 1 2 3 Naorem Sanajaoba (1988). Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization. Mittal Publications. pp. 12–14. ISBN 978-81-7099-853-2.
  17. Naorem Sanajaoba (1988). Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization. Mittal Publications. pp. 3–6, 11–12, 15–18. ISBN 978-81-7099-853-2.
  18. Singha, Komol (2012). "Nexus between Conflict and Development in India: A Case of Manipur". International Journal of Humanities and Applied Sciences 1 (5): 142–143. http://journalsweb.org/siteadmin/upload/24482%20IJHAS015031.pdf. பார்த்த நாள்: 18 June 2015. ""Further, as an effort to popularise Hinduism and to make it as a state religion, on a full moon day of October (Wakching in Meitei), in 1729 AD, he collected all the Holy books (Puya) related to Sanna-Mahi religion and burnt them completely, devastated the ancient Meitei scriptures and cultural history."".
  19. Soibam Birajit (2014). Meeyamgi Kholao: Sprout of Consciousness. ARECOM Publishers. pp. 120–121. GGKEY:3Z4QYHH8K7K.
  20. 1 2 Soibam Birajit (2014). Meeyamgi Kholao: Sprout of Consciousness. ARECOM Publishers. pp. 120–121. GGKEY:3Z4QYHH8K7K.Soibam Birajit (2014). Meeyamgi Kholao: Sprout of Consciousness. ARECOM Publishers. pp. 120–121. GGKEY:3Z4QYHH8K7K.
  21. Oinam, Bhagat; Sadokpam, Dhiren A. (2018-05-11). Northeast India: A Reader (in ஆங்கிலம்). Taylor & Francis. pp. 236, 237. ISBN 978-0-429-95320-0. The epics of the seven incarnations Apart from several other works based on the theme of love, mention may be made of the literature coming from the Moirang region of Manipur. A civilization situated on the magnificent Loktak Lake, the culture of the Moirang clan has been noted. Numerous manuscripts of the Moirang region dwell on the theme of love. One of the most popular stories refers to the seven pairs of lovers who are regarded as incarnations of the same souls in different generations or ages. The seven cycles are Akongjamba (hero) and Phouoibi (heroine): Henjunaha (hero) and Leima Lairuklembi (heroine); Khuyol Haoba (hero) and Yaithing Konu (heroine); Kadeng Thangjahanba (hero) and Tonu Laijinglembi (heroine); Ura Naha Khongjomba (hero) and Pidonnu (heroine); Wanglen Pungdingheiba (hero) and Sappa Chanu Silheibi (heroine); Khamba (hero) and Thoibi (heroine).
  22. Meitei, Mayanglambam Mangangsana (2021-06-06). The Sound of Pena in Manipur (in ஆங்கிலம்). Marjing Mayanglambam. p. 30. ISBN 978-93-5473-655-1.
  23. Athing Ningshen, Dr; Ningson Primrose, Mrs (14 September 2018). URBAN POVERTY AND LIVELIHOODS (in ஆங்கிலம்). p. 44. ISBN 978-0-359-01332-6.
  24. "Meitei Script and Scriptures". e-pao.net. Retrieved 2023-02-25.
  25. Laishram, Sadhana. "Conservation and preservation of Manuscripts in Manipur" (PDF).

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்புரிய_இலக்கியம்&oldid=4472488" இலிருந்து மீள்விக்கப்பட்டது