மணிப்பள்ளி நாராயண ராவ் வெங்கடாச்சியா
எம்.என்.வேங்கடச்சியா | |
---|---|
படிமம்:நீதிபதி எம்.என்.வேங்கடச்சியா | |
25வது இந்தியாவின் தலைமை நீதிபதி | |
பதவியில் 12 பிப்ரவாி 1993 – 24 அக்டேபா் 1994 | |
நியமித்தவர் | சங்கா் தயாள் சா்மா |
முன்னவர் | எல்.எம்.சா்மா |
பின்வந்தவர் | எ.எம்.அமதி |
2 வது தேசிய மனித உாிமை ஆணைய தலைவா் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 25 அக்டோபர் 1929 |
வாழ்க்கை துணைவர்(கள்) | பா்வதி வேங்கடச்சியா |
எம். என். வேங்கடச்சியா (25 அக்டோபர் 1929 அன்று பிறந்தார்) இந்தியாவின் 25 வது தலைமை நீதிபதியாக பதவி வகித்தாா்.[1][2][3][4] இவா் இந்தியாவின் தலைைமை நீதிபதியாக 1993 முதல் 1994 வரை இருந்ததா். தற்போது அவர் நவீன சற்குரு என்ற ஸ்ரீ சத்ய சாய் உயா் கல்வி நிறுவனத்தில் (நிகா்நிலை பல்கலைகழகம்) வேந்தராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம் தற்கால குருகுலமாகவும், ஆசிாியா் - மாணவர் ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைந்த கல்விமுறையின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. இது ஐந்து புலங்களை உள்ளடக்கியது. [5][6] இந்தியாவின் தேசிய மற்றும் கலாசார மதிப்புகளை மீட்கும் முயற்சியில் ஈடுபடக்கூடிய, தேசிய மதிப்பீடுகளை மீளப்பெறும் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு 2008 ல் உருவாக்கப்பட்டது.[7]
இவர் அறிவியல் துறையில் இளங்கலை மட்டும் பெற்றார், ஆனால் மைசூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலை பெற்றார். அவர் 1951 இல் சட்டத் துறையில் முறைப்படி பயிற்சி பெற தாெடங்கினாா்.நவம்பர் 6, 1975 இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் . அவர் அக்டோபர் 5, 1987 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். கடைசியாக, இவா் இந்தியாவின் 25 வது தலைமை நீதிபாதியாக 12 ஜனவாி 1993 இல் நியமிக்கப்பட்டாா். பின்பு அப்பதவியிலிருந்து 24 அக்டோபா் 1994 இல் ஒய்வு பெற்றாா்.[8]
2003-ல் ஆட்சி மாற்றத்திற்கான மாற்று மையத்தின் துவக்கத்திற்கான ஆதரவு உட்பட, ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் பற்றி அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்..[9]
அவர் 1996-1998 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றினாா். 2000 ஆம் ஆண்டில் அரசியலமைப்பை மறுபரிசீலனை செய்யக் கூடிய தேசிய ஆணையத்திற்கு தலைமை தாங்கினார்..[10][11][12][13]
தற்போது அவர் பிரசாந்த் நிலையத்திலுள்ள ஸ்ரீ சத்யா உயா் கல்வி கற்றல் நிறுவனத்தில், வேந்தராக பணியாற்றுகிறார்.
மரியாதைகள்[தொகு]
- பத்ம விபூஷன் - இந்தியாவின் இரண்டாவது உயர்ந்த குடிமகன் கௌரவம் 2004 ல் இந்தியாவின் ஜனாதிபதி மூலம் பெற்றாா்.
- டாக்டர் ஆப் லேட்டர்ஸ் (கௌனீஸ் கொஸ்ஸா) - பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
[14] - சட்டங்களின் முனைவா் (LL.D) (கௌரவஸ் கேஸ்) - மணிபல் பல்கலைக்கழகம் [15][16]
- ராணி சன்னம்மா பல்கலைக்கழகத்தில், பெல்காமில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் [17][18][19]
பாா்வை[தொகு]
- ↑ M. N. Venkatachaliah
- ↑ M.N. Venkatachaliah | GRAAM
- ↑ Parliamentary panel on Lokpal calls ex-CJIs MN Venkatachaliah, JS Verma - India - DNA
- ↑ Kalidas Ghalib Foundation
- ↑ Former CJI M.N. Venkatachaliah is chancellor of Sri Satya Sai Institute - Deccan Chronicle
- ↑ Sri Sathya Sai Institute of Higher Learning - Key University Officers
- ↑ "People Behind the Movement". மூல முகவரியிலிருந்து 17 Apr 09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 December 2012.
- ↑ People
- ↑ http://www.mraindia.org/disha/disha_jan04/center.html
- ↑ rediff.com: The Rediff Interview/Justice M N Venkatachaliah
- ↑ Ncrwc - Final Report
- ↑ Judicial reforms cannot ignore public perceptions - The New Indian Express
- ↑ An exercise to watch
- ↑ Honorary doctorate for Nirupama Rao - The Hindu
- ↑ Manipal University (via noodls) / The 15th Convocation was unique
- ↑ http://www.manipal.edu/NewsRoom/Documents/Invitation_Convocation%202012.pdf
- ↑ ‘Give a boost to R&D, science’ - The Hindu
- ↑ RCU organise first convocation on Feb 16 | Karnataka News | newkerala.com
- ↑ RCU organise first convocation on Feb 16 - Chennaionline News