மணிப்பள்ளி நாராயண ராவ் வெங்கடாச்சலய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்பள்ளி நாரயணராவ் வெங்கடாச்சலய்யா
Justice M. N. Venkatachaliah BNC.jpg
25ஆவது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
12 பிப்ரவரி 1993 – 24 அக்டோபர் 1994
நியமித்தவர் சங்கர் தயாள் சர்மா
முன்னவர் இலலித் மோகன் சர்மா
பின்வந்தவர் அ. மு. அகமதி
2வது தலைவர் தேசிய மனித உரிமை ஆணையம்
பதவியில்
26 நவம்பர் 1996 – 24 அக்டோபர் 1999
தனிநபர் தகவல்
பிறப்பு 25 அக்டோபர் 1929 (1929-10-25) (அகவை 93)
வாழ்க்கை துணைவர்(கள்) பார்வதி

எம். என். வெங்கடாச்சலய்யா (Manepalli Narayanarao Venkatachaliah) (25 அக்டோபர் 1929 அன்று பிறந்தார்) இந்தியாவின் 25 ஆவது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தாா்.[1][2][3][4] 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் தலைைமை நீதிபதியாக 1993 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். தற்போது நவீன குருகுலமாகக் கருதப்படும் சத்குரு சிறீ சத்ய சாய் உயா் கல்வி நிறுவனத்தில் (நிகா்நிலை பல்கலைகழகம்) வேந்தராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் ஆசிாியா் - மாணவர் ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைந்த கல்விமுறையின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. இது முக்கியமாக அறிவு, பண்பாடு, உடல், சேவை மற்றும் பக்தி ஆகிய ஐந்து புலங்களை உள்ளடக்கியது. [5][6] இந்தியாவின் தேசிய மற்றும் கலாசார மதிப்புகளை மீட்கும் முயற்சியில் ஈடுபடக்கூடிய, தேசிய மதிப்பீடுகளை மீளப்பெறும் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழு 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[7]

அறிவியல் துறையில் இளநிலை பட்டமும் மைசூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் இளநிலைப் பட்டமும் பெற்றார். 1951 ஆம் ஆண்டு சட்டத் துறையில் முறைப்படி பயிற்சி பெறத் தாெடங்கினாா். நவம்பர் 6, 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் . அக்டோபர் 5, 1987 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். கடைசியாக, இவா் இந்தியாவின் 25 ஆவது தலைமை நீதிபாதியாக 12 ஜனவாி 1993 இல் நியமிக்கப்பட்டாா். பின்பு அப்பதவியிலிருந்து 24 அக்டோபா் 1994 இல் ஒய்வு பெற்றாா்.[8]

பணி ஓய்வுக்குப் பின்னர் 2003- ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கான மாற்று மையத்தின் துவக்கத்திற்கான ஆதரவு உட்பட, ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் பற்றி இவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்..[9]

1996-1998 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றினாா். 2000 ஆம் ஆண்டில் அரசியலமைப்பை மறுபரிசீலனை செய்யக் கூடிய தேசிய ஆணையத்திற்கு தலைமை தாங்கினார்..[10][11][12][13]

தற்போது இவர் பிரசாந்த் நிலையத்திலுள்ள சிறீ சத்யா உயா்கல்வி கற்றல் நிறுவனத்தில், வேந்தராக பணியாற்றுகிறார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "M. N. Venkatachaliah". 2014-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 2. "M.N. Venkatachaliah | GRAAM". 2014-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 3. Parliamentary panel on Lokpal calls ex-CJIs MN Venkatachaliah, JS Verma - India - DNA
 4. "Kalidas Ghalib Foundation". 2014-11-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Former CJI M.N. Venkatachaliah is chancellor of Sri Satya Sai Institute - Deccan Chronicle". 2014-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Sri Sathya Sai Institute of Higher Learning - Key University Officers". 2014-11-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 7. "People Behind the Movement". 17 ஏப்ரல் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 திசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
 8. "People". 2009-04-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-07-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 10. rediff.com: The Rediff Interview/Justice M N Venkatachaliah
 11. "Ncrwc - Final Report". 2015-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 12. Judicial reforms cannot ignore public perceptions - The New Indian Express
 13. An exercise to watch
 14. Honorary doctorate for Nirupama Rao - The Hindu
 15. Manipal University (via noodls) / The 15th Convocation was unique
 16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-12-16 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 17. ‘Give a boost to R&D, science’ - The Hindu
 18. "RCU organise first convocation on Feb 16 | Karnataka News | newkerala.com". 2013-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 19. "RCU organise first convocation on Feb 16 - Chennaionline News". 2013-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-16 அன்று பார்க்கப்பட்டது.