மணிபுரம்

மணிபுரம் என்பது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது பவானி வட்டத்துக்கு உட்பட்ட சலங்கபாளையம் பஞ்சாயத்துக்குக் கீழ் வரும் ஊர் ஆகும்[4][5]. இது கவுந்தபாடி-காஞ்சிகோவில்-பெருந்துறை சாலையில் அமைந்துள்ளது. கவுந்தப்பாடியில் இருந்து 2 கிமீ தொலைவிலும் காஞ்சிகோவிலில் இருந்து 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
வழிபாட்டு இடங்கள்[தொகு]
- விநாயகர் கோவில்
- வீரமாத்தியம்மன் கோவில்[6]
கல்வி[தொகு]
இந்த ஊரில் மிகக் குறைவான மக்கள் தொகையே உள்ளது என்பதால் இங்கு தனியாக பள்ளி இல்லை. ஆனால் மிக அருகிலுள்ள கே. ராமநாதபுரம் என்ற ஊரில் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி உள்ளது. மேலும் அருகில் உள்ள மற்றொரு ஊரான மின்னவேட்டுவம்பாளைத்தில் எட்டாம் வகுப்பு வரையலான நடுநிலை பள்ளி உள்ளது. மேல்நிலை பள்ளி செல்ல வேண்டும் என்றால் கவுந்தப்பாடி, காஞ்சிகோவில் போன்ற ஊர்களுக்கு போக வேண்டும். கல்லூரி செல்ல கோபி, பெருந்துறை, ஈரோடு போன்ற ஊர்களை நோக்கி செல்ல வேண்டும்.
தொழில்[தொகு]
இங்கு பெரும்பாலும் விவசாயமே முதன்மை தொழிலாக உள்ளது. சிலர் வாய்க்கால் நீர்ப்பாசனத்தையே நம்பி உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நெல், எள், வேர்க்கடலை,கம்பு மற்றும் சோளம் போன்றவற்றைப் பயிர் செய்கின்றனர். சிலர் கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்றவற்றைப் பயன்படுத்தி வாழை, மஞ்சள், கரும்பு, தென்னை, காய்கறி போன்ற பயிர்களை விளைவிக்கின்றனர். மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.
அருகிலுள்ள ஊர்கள்[தொகு]
- சாலையூர்
- கே. ராமநாதபுரம்
- ஈஞ்சரம்
- மின்னவேட்டுவம்பாளையம்
- குறிச்சான் வலசு
- எரப்ப நாயக்கனூர்
மேற்கோள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=10
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=10¢code=0002&tlkname=Bhavani#MAP
- ↑ தினமலர்(03/06/2011). "வீரமாத்தியம்மன் கோவில் குடமுழுக்கு". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 5 மார்ச் 2014.