மணிசு திவாரி
மணிசு திவாரி | |
|---|---|
T2014-ல் திவாரி | |
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | கிர்ரான் கெர் |
| தொகுதி | சண்டிகர் மக்களவைத் தொகுதி |
| பதவியில் 23 மே 2019 – 4 சூன் 2024 | |
| முன்னையவர் | பிரேம் சிங் சாந்துமஜ்ரா |
| பின்னவர் | மல்விந்தர் சிங் காங் |
| தொகுதி | அனந்தபூர் சாகிப் மக்களவைத் தொகுதி |
| பதவியில் 16 மே 2009 – 18 மே 2014 | |
| முன்னையவர் | சரண்ஜித் சிங் தில்லான் |
| பின்னவர் | இரவ்நீத் சிங் பிட்டு |
| தொகுதி | லூதியானா மக்களவைத் தொகுதி |
| தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியா | |
| பதவியில் 28 அக்டோபர் 2012 – 26 மே 2014 | |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னையவர் | அம்பிகா சோனி |
| பின்னவர் | பிரகாஷ் ஜவடேகர் |
| தலைவர்-இந்திய இளைஞர் காங்கிரசு | |
| பதவியில் 1998–2003 | |
| முன்னையவர் | சத்தியஜித் டி. கெய்க்வாட் |
| பின்னவர் | ரண்தீப் சுர்ஜேவாலா |
| தலைவர்-இந்திய தேசிய மாணவர் பேரவை | |
| பதவியில் 1986–1993 | |
| முன்னையவர் | முகுல் வாசுனிக் |
| பின்னவர் | சலீம் அகமது |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 8 திசம்பர் 1965[1] சண்டிகர், கிழக்கு பஞ்சாப், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | நசுனின் சிபா |
| வாழிடம் | சண்டிகர், இந்தியா |
| கல்வி | இளங்கலைச் சட்டம் |
| முன்னாள் மாணவர் | தில்லி பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
மணிசு திவாரி (Manish Tewari)(பிறப்பு திசம்பர் 8,1965) என்பவர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக உள்ளார். திவாரி தற்போதைய 18ஆவது மக்களவையில் சண்டிகரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2] 17ஆவது மக்களவையில் அனந்த்பூர் சாகிப் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2012 முதல் 2014 வரை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகவும், 2009 முதல் 2014 வரை லூதியானா மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார். இவர் 2024 இந்திய பொதுத் தேர்தலில் சண்டிகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மனிசு திவாரி 8 திசம்பர் 1965 அன்று இந்தியாவின் சண்டிகர் நகரில் இந்து பிராமண தந்தை வி. என். திவாரி அமிரித் திவாரி இணையரின் மகனாகப் பிறந்தர்.[4] திவாரியின் தந்தை வி. என். திவாரி பஞ்சாபி மொழி எழுத்தாளரும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் ஜாட் சீக்கியரும் ஆவார். இவரது தாய் அமிர்த் திவாரி, பல் மருத்துவராகவும், பேராசிரியராகவும், தலைவராகவும், வாய்வழி சுகாதார அறிவியல் மையத்திலும், முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புலத்தலைவராகவும் பணிபுரிந்தார்.[5][6] இவரின் தந்தை 1984இல் காலிஸ்தானி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இவரின் தாயார் 2018இல் மாரடைப்பால் இறந்தார்.[6] திவாரியின் தாய்வழி தாத்தா சர்தார் தீரத் சிங் ஒரு வழக்கறிஞராகவும், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசு அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
சண்டிகரில் உள்ள தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் படித்த திவாரி சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பட்டம் பெற்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைச் சட்டப் பட்டம் பெற்றார்.[7] பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், நீச்சல், நீரிப் பந்தாட்டம் விளையாட்டு அணிகளை வழிநடத்தினார்.[7] திவாரி மார்ச் 1996இல் பார்சி நஸ்னின் சிபா என்பவரை மணந்தார். இப்போது புது தில்லி லோதி கார்டனில் வசிக்கிறார். இந்த தம்பதிக்கு இனிகா திவாரி என்ற மகள் உள்ளார்.[7]
தொழில் வாழ்க்கை
[தொகு]
.
திவாரி 1988 முதல் 1993 வரை இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகவும், 1998 முதல் 2000 வரை இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராகவும் இருந்தார்.[8] 2004 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த இவர், 2009 மக்களவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் வேட்பாளர் குர்சரண் சிங் கலிப்-ஐ 100,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தார். தொழிலில் வழக்கறிஞரான திவாரி, தற்போது இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றங்கள் மற்றும் பஞ்சாப் மற்றும் அரியானாவில் பணியாற்றுகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராக, புலனாய்வு அமைப்புகளை நாடாளுமன்ற மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதற்காக ஒரு தனியார் உறுப்பினர் மசோதாவை தயாரிப்பதில் இவர் தீவிரமாக செயல்பட்டார்.[9] இவர் தனது தொகுதியான லூதியானாவில் இருந்து தேர்தலில் போட்டியிட திட்டமிடப்பட்டிருந்தபோது, மார்ச் 2014இல் இதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[10] சில நாட்களுக்குப் பிறகு, உடல்நிலை சரியில்லாததால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். இவருக்குப் பதிலாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரனான இரவ்னீத் சிங் பிட்டு போட்டியிட்டார்.[11]
பிரிட்ஜ் இந்தியாவின் இணையக் கருத்தரங்கில் "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முதல் ஆண்டின் இறுதியில் பங்கு எடுப்பது" என்ற தலைப்பில் மணிசு திவாரி ஒரு பேச்சாளராக இருந்தார்.[12] 2022ஆம் ஆண்டில், 2022 இந்திய தேசிய காங்கிரசு தலைவர் தேர்தலில் திவாரி வேட்பாளராக போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.[13]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manish Tewari Biography". NRIInternet.com. Retrieved 4 January 2013.
- ↑ Sethi, Chitleen K. (2024-06-04). "Congress's Manish Tewari wrests Chandigarh from BJP after 10 yrs, Sanjay Tandon loses by slim margin". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-06-17.
- ↑ The Economic Times (6 June 2024). "Bullish Wins & Bearish Losses: Here are the key contests and results of 2024 Lok Sabha polls". https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/bullish-wins-bearish-losses-here-are-the-key-contests-of-2024-lok-sabha-results/articleshow/110713130.cms?from=mdr.
- ↑ "Detailed profile: Shri Manish Tewari". Government of India. Retrieved 16 October 2019. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ManishTewari (Nov 21, 2018). "Actually Prabhu ji @PrabhuChawla "I am half a Jat Sikh too - from my mother's side & proud of the Hindu- Sikh syncretism that is my DNA. My Late Father called it Punjabiyat. While I was growing up religion, caste & the rest of it was alien to me. I discovered that I was a Hindu1/2"" (Tweet). Retrieved Sep 14, 2024.
- 1 2 Singh, Robin (15 January 2018). "Prof Amrit Tewari, former PGI Dean, passes away at 80". The Tribune. https://www.tribuneindia.com/news/archive/prof-amrit-tewari-former-pgi-dean-passes-away-at-80-528752.
- 1 2 3 "Detailed profile: Shri Manish Tewari". Government of India. Retrieved 16 October 2019.
- ↑ "Tewari, Shri Manish". Parliament of India. Retrieved 24 February 2020.
- ↑ "Indian spy agencies to come under parliament oversight?". http://economictimes.indiatimes.com/news/politics/nation/indian-spy-agencies-to-come-under-parliament-oversight/articleshow/9601416.cms.
- ↑ "Manish Tewari unlikely to contest Lok Sabha polls". 16 March 2014.
- ↑ "Manish Tewari not to contest Lok Sabha polls". 25 March 2014.
- ↑ "Bridge India's webinar series". Bridge India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2021-11-02.
- ↑ "Kamal Nath, Manish Tewari may contest in Congress chief polls". www.telegraphindia.com. September 22, 2022. Retrieved 2022-09-28.