மணிக்குரல் (இலங்கைச் சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணிக்குரல் இலங்கையில் கல்ஹின்னை எனும் இடத்திலிருந்து 1961ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய இலக்கிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • கவிஞர் எம். சீ. எம். சுபைர்

வெளியீடு[தொகு]

  • கல்ஹின்னை மாணவர் சங்கம்

இதன் செயலாளராக இருந்த இவர் பின்பு தலைவர் ஆகப் பணியாற்றியுள்ளார். 1967 வரை மணிக்குரல் வெளிவந்துள்ளது.

மணிக்குரல் பதிப்பகம்[தொகு]

பின்பு "மணிக்குரல் பதிப்பகம்" எனும் பெயரில் பதிப்பகம் தொடங்கி, பல இசுலாமிய இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.