மணிகண்டபுரம்

ஆள்கூறுகள்: 9°31′05″N 76°34′42″E / 9.518057°N 76.5784076°E / 9.518057; 76.5784076
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிகண்டபுரம்
മണികണ്ഠപുരം
கிராமம்
கல்லில் செதுக்கப்பட்ட தெக்கும்கூர் அரச சின்னம். (புஞ்சமன் இல்லம்)
கல்லில் செதுக்கப்பட்ட தெக்கும்கூர் அரச சின்னம். (புஞ்சமன் இல்லம்)
ஆள்கூறுகள்: 9°31′05″N 76°34′42″E / 9.518057°N 76.5784076°E / 9.518057; 76.5784076
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
அரசு
 • வகைகிராமம்
 • நிர்வாகம்வாகத்தானம் கிராம ஊராட்சி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்686538
தொலைபேசி இணைப்பு எண்0481
வாகனப் பதிவுகேஎல்-33

மணிகண்டபுரம் (Manikandapuram) ( மலையாளம்: മണികണ്ഠപുരം) என்பது, தெக்கும்கூர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது (இப்போது இந்தியாவின் ஒரு பகுதி). [1] தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் சங்கனாச்சேரி வட்டத்திலுள்ள வாகத்தானம் கிராமத்தின் ஒரு பகுதியாக மணிகண்டபுரம் உள்ளது. தெக்கும்கூர் சுதேச அரசர்களின் ஆரம்பகால தலைமையகமாக வென்னிமலை நிறுவப்பட்டது. [2] வென்னிமலை, காடுகளால் சூழப்பட்டு எதிரிகளிடமிருந்து காக்கும் பாதுகாப்பான இடமாக இருந்தது. மணிகண்டபுரம் தலைநகரமாக இருந்த போது, இங்குள்ள காடுகள் வெட்டப்பட்டு மக்கள் வாழக்கூடிய பகுதிகளாக மாற்றம் செய்து நிர்வாகம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிகண்டபுரம் கோயில்[தொகு]

மணிகண்டபுரம் கோயில்

இங்குள்ள சிறீ கிருட்டிணன் கோயில் 12 ஆம் நூற்றாண்டில் தெக்கும்கூர் மன்னர் எரவி மணிகண்ட வர்மன் காலத்தில் (ஆட்சி: பொ.ச.1150 - 1180) கட்டப்பட்டது. கோயிலின் கட்டுமானமும், கிருட்டிணனின் சிலை நிறுவுதலும் கொல்ல ஆண்டு 325இல் (பொ.ச. 1150) மலையாள மாத மேடம் (மீனம்) 25வது நாளில் நடந்தது. [3] [4] மன்னர் வெண்ணிமலையிலுள்ள இராம இலட்சுமண சுவாமி கோவிலின் ஆண்டு விழாவில் பங்கேற்றதாகவும் தெரிகிறது. மன்னன் எரவி மணிகண்டன் தனது வேட்டையின் போது தெரியாமல் ஒரு மாட்டைக் கொன்றதால், அதற்குப் பிராயச்சித்தமாக மணிகண்டபுரம் கோயில் கட்டப்பட்டது. [5] [6] [7]

கோட்டைகள்[தொகு]

சங்கனாச்சேரியையும், தலியந்தானபுரத்தையும் (கோட்டயம்) பிற்காலத் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சிபுரிந்த தெக்கும்கூர் அரசர்களின் காலத்திய கோட்டையும் சுரங்கங்களும் மணிகண்டபுரத்தில் இருந்தன என்பதற்கான சான்றுகள் உள்ளன. [8] தெக்கும்கூர் வம்சத்தில் இந்த கோயில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த கோயிலைப் பற்றியக் குறிப்புகள் கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய ஐதீகமாலா என்ற நாட்டுப்புறவியல் கதைத் தொகுப்புகளிலும், பொ.ச. 14 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சந்தேச காவ்யமான (செய்தி கவிதை) "உன்னுநீலி சந்தேசம்" ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. [9] [10]

உன்னுநீலி சந்தேசம்[தொகு]

மலையாளக் கவிதை நூலான உன்னுநீலி சந்தேசம் பண்டைய மணிகண்டபுரத்தைப் பற்றியும் இங்கு அமைந்துள்ள கிருட்டிணன் கோவிலைப் பற்றியும் விவரிக்கிறது. இதில், வென்னிமலையையும், மணிகண்டபுரத்தை இணைக்கும் ஒரு சுரங்கப்பாதையைப் பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க ஏற்றவாறு பல ஏக்கர் நெல் வயல்களை இக்கோயில் கொண்டிருந்தன. [11] [12]

மேற்கோள்கள்[தொகு]

 1. Book Title: Sthalapurāṇaṅṅaḷ Author: Iṭamaruk Publisher: Royal Book Depot, 1972 Original from The University of California Digitized: 2 Jun 2009 Length: 210 pages
 2. Book Title: Sthalapurāṇaṅṅaḷ Author: Iṭamaruk Publisher: Royal Book Depot, 1972 Original from The University of California Digitized: 2 Jun 2009 Length: 210 pages
 3. "MANIKANDAPURAM SREEKRISHNA SWAMY TEMPLE - History". www.manikandapuramtemple.org. Archived from the original on 2021-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
 5. "MANIKANDAPURAM SREEKRISHNA SWAMY TEMPLE - History". www.manikandapuramtemple.org. Archived from the original on 2021-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
 6. Kottarathil, Sankunni (2018). AITHIHYAMALA (Malayalam). 1 (Issue No. 1 ed.). Kottayam, Kerala, India: DC Books. p. 20. ISBN 9780195698893
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
 8. Encyclopedia of Tourism Resources in India; Author: Dr. Manohar Sajnani, Published in 2001, Published by: Kalpaz Publications; Address: C-30, Satyawati Nagar, Phase-III, Ashok Vihar, Delhi-110052, ISBN 81-7835-014-9 (set), ISBN 81-7835-018-1 (Vol II)
 9. Kottarathil, Sankunni (2018). Aithihyamala (Malayalam). 1 (Issue No. 1 ). Kottayam, Kerala, India: DC Books. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195698893. 
 10. Unnuneeli Sandesam - Thembattu Sankaran Nair; Published by DC Books, Kottayam; 132 pages
 11. Unnuneeli Sandesam - Thembattu Sankaran Nair; Published by DC Books, Kottayam; 132 pages
 12. Book Title: Unnuneeli Sandesam Edited By: Elamkulam P N Kunjan Pillai Publisher: National Book Stall Category: Malayalam Poems
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிகண்டபுரம்&oldid=3566307" இலிருந்து மீள்விக்கப்பட்டது