மணா, இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணா
Mana
கிராமம்
மணா கிராமத்தின் நுழைவாயில்
மணா கிராமத்தின் நுழைவாயில்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Uttarakhand" does not exist.இந்தியா, உத்தரகாண்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°46′19″N 79°29′43″E / 30.77194°N 79.49528°E / 30.77194; 79.49528ஆள்கூற்று: 30°46′19″N 79°29′43″E / 30.77194°N 79.49528°E / 30.77194; 79.49528
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்சமோலி
ஏற்றம்3,200
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,214
Languages
 • Officialஇந்தி, கார்வாலி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுயு.கே 11

மணா (Mana) என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 58 இன் வடக்கு முனையில் [1] மணா கிராமம் 3,200 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது[2]. இந்தியா மற்றும் திபெத் எல்லையில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மணா கணவாய் தொடங்குவதற்கு முன்பு அப்பாதையில் கடைசியாக இடம்பெற்றுள்ள கிராமம் மணா கிராமம் ஆகும். மேலும், இந்துகளின் புனித நகரான பத்ரிநாத் இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் இவ்விரு இடங்களும் பாரம்பரிய கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துள்ளன.

மக்கள் தொகை[தொகு]

இக்கிராமத்தில் 558 குடும்பங்களில் 1214 நபர்கள் வசிப்பதாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது[3]. இம்மக்கள் மார்ச்சா மற்றும் சாட் அல்லது போட்டியாசு இனத்தை சேர்ந்தவர்கள். குளிர் காலங்களில் இப்பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு விடுவதால் மொத்த மக்கள் தொகையும் கீழே தாழ்வான பகுதிகளுக்கு வந்துவிடுகின்றனர்[2]. இந்திய எல்லையில் தங்கள் கடைதான் கடைசி தேனீர் கடை என்று இங்குள்ள பல தேனீர் கடையினர் மக்களிடம் கூறுவார்கள் [4].

கலாச்சார அடையாளம்[தொகு]

இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பத்ரிநாத் கோயிலுடன் காலாச்சாரப் பிணைப்பு கொண்டவர்கள் ஆவர். முற்காலத்தில் இவர்கள் திபெத்துடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மணாவிலுள்ள வியாசு கஃபா எனப்பெயரிடப்பட்ட சிறிய குகையை காண வருகின்றனர். மாமுனி வியாசர் இக்குகையில் அமர்ந்துதான் மகாபாரதம் பாடியதாக நம்பப்படுகிறது [2]. இக்குகையைத் தவிர கணேசு கஃபா என்ற பெயரில் மற்றொரு குகையும் இங்கு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இவ்விரு குகைகளையும் காண்பதற்கு பெரும்பாலும் இங்கு வருகின்றனர்.

பிற சுற்றுலா இடங்கள்[தொகு]

வசுதரா நீர்வீழ்ச்சி, சடோபந்த் ஏரி, பிம் புல் போன்ற பல இடங்கள் மணாவிற்கு அருகில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணா,_இந்தியா&oldid=2781266" இருந்து மீள்விக்கப்பட்டது