மணவூர் (பாண்டிய நாடு)
தோற்றம்
மணவூர் என்பது பாண்டியர் தலைநகரமாக இலக்கியங்களில் கூறப்படும் ஊராகும்.இதை குலசேகர பாண்டியன் என்னும் மன்னன் முதலில் தலைநகரமாக கொண்டு ஆண்டவன். [1] மணவூர் என்ற பெயரிலேயே மற்றொரு ஊர் சோமசேகரன் வழியினருக்கும் தலைநகராய் இருந்ததாகவும் அதே புராணம் கூறுகிறது. உக்கிர குமார பாண்டியன் திருமண வரன் பார்க்கும் போது வடபுலத்து மணவூர் ஆளும் சோமசேகரன் மகள் காந்திமதியை தேர்ந்தெடுத்து மணம்செய்து வைத்தனர். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இன்னரம்புளர் ஏழிசை எழியன்மிடற்றளிகள் கின்னரம்பயில் கடம்ப மாவனத்தினின் கீழ் சார் தென்னர்சேகரன் எனும் குலசேகரன் உலக மன்னர் மன்னர் சேகரன் அரசு செய்திருப்பது மணவூர் - பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் திருநகரங்கண்ட படலம் பாடல் 473
- ↑ தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு வேந்தன் பரிதி திருமரபின் விளங்கும் சோமசேகரன் என்று ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய் - பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் உக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் பாடல்கள் 969