மணல் வீடு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணல் வீடு நாட்டார் வழக்காற்றியல் பிரிவைச்சார்ந்த ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திலிருந்து வெளிவரும் இவ்விதழ் மே - ஜூன் 2010 முதல் வெளிவருகிறது. இது ஒரு காலண்டிதழ் ஆகும். தமிழக நாட்டார் வழக்காற்றியலை, தமிழின் மரபுக்கலைகளைப் பதிவு செய்வதில் குறிப்பிடத்தக்கப் பணியை இவ்விதழ் மேற்கொண்டு வருகின்றது. இதழாசிரியர் மு.ஹரி கிருஷ்ணன் ஆவார்.

சுகுமாரன், பொதிகைச்சித்தர், பா.மணி, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், தேவேந்திர பூபதி, மா.காளிதாஸ், லக்ஷ்மி சரவணகுமார், பயணி, ஜெயந்தி சங்கர், எஸ். ஆர்ஷியா, அனுராதா, இசை, இளங்கோ கிருஷ்ணன், இளஞ்சேரல், கலை இலக்கியா, எஸ். செந்தில் குமார், ஜோ.செ. கார்த்திகேயன், சைதன்யா, தாரா.கணேசன், சு.வெங்குட்டுவன் ஆகியோரின் படைப்புகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்_வீடு_(இதழ்)&oldid=3478505" இருந்து மீள்விக்கப்பட்டது