மணல் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணல் திருவிழ்ழவிற்காக செய்யப்பட்ட சிற்பம்

மணலைக் கொண்டு சிற்பங்கள் செய்து போட்டிகளை நடத்துவதே மணல் திருவிழா ஆகும். கல், மரம், வெண்கலம் போன்றவற்றில் உருவாக்குவது போல மணலிலும் சிற்பங்களை உருவாக்குகிறார்கள். [1]

மணல் திருவிழா என்பது உலகத்தில் பரவலாக நடைபெறுவருகிறது. இந்தியாவில் ஒரிசா மாநிலம் பூரியில் மணல் திருவிழா நடைபெறுகிறது. பூரியில் சுதர்சன் பட்நாயக் என்னும் கலைஞர் சுனாமி பேரழிவினால் ஏற்பட்ட நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் மணலில் சிற்பங்களைச் செய்து காட்சிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் கோவாவிலும் மணல் விழா கோவா சுற்றுலாத் துறையின் கூட்டுறவால் நடத்துகிறார்கள்.

அமெரிக்கா,  இங்கிலாந்து, ஆத்திரேலியா, கனடா, செருமனி, இந்தோனேசியா, நெதர்லாந்து, பாக்கித்தான், போர்ச்சுக்கல்  ரசியா, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் இந்த மணல் திரு விழா நிகழ்கிறது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்_திருவிழா&oldid=2160902" இருந்து மீள்விக்கப்பட்டது