மணல் அச்சில் வார்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணலில் வார்த்தல் அல்லது மணல் அச்சில் வார்த்தல் என்பது மணலினால் உருவாக்கப்பட்ட அச்சில் உலோகங்களை உருக்கி வார்ப்பதன் மூலம் பொருட்களை உருவாக்கும் செயல்முறையாகும். 70% இற்கும் அதிகமான உலோக வார்த்தல்கள், மணல் வார்த்தல் செயல்முறையினாலேயே உருவாக்கப்படுகின்றன. மணலில் வார்த்தல் ஒப்பிட்டளவில் மலிவானதும் உருக்கினை வார்த்தல் போன்ற கடும் வெப்ப வேலையில் பயன்படுத்தக்கூடிய முறையுமாகும். அச்சு உருவாக்கப் பயன்படும் மணலுடன் ஒட்டும் பொருட்கள் (பொதுவாக களி போன்றவை) கலக்கப்படுகின்றன, இக்கலவை வழக்கமாக நீரினாலோ அல்லது பிற பொருட்களினாலோ ஈரப்படுத்தப்படுகிறது, அச்சிற்குத் தேவையான வலிமையையும் நெகிழ்தன்மையையும் பெற மற்றையப் பொருட்களும் கலக்கப்படுகின்றன.

அடிப்படை செயல்முறை[தொகு]

  1. மாதிரி வடிவத்தை மணலில் பதிப்பதன் மூலம் அச்சு உருவாக்கப்படுகிறது.
  2. மாதிரி உருவை மணல் அச்சிலிருந்து நீக்கல்.
  3. வார்க்கப்படும் உலோகம் வழிந்தோடுவதற்கான வாயில் அமைத்தல்.
  4. அச்சினுள் திரவநிலையில் உலோகத்தை வார்த்தல்.
  5. உலோகத்தை குளிர்மையடைய விடல்.
  6. மணல் அச்சினை உடைத்து வார்க்கப்பட்ட பொருளை எடுத்தல்.

பாகங்கள்[தொகு]

  1. மாதிரியுரு
  2. அச்சுப்பொட்டி
  3. உள்ளகம்
  4. குளிர்விப்பான்

மாதிரியுரு[தொகு]

உள்ளகத்துடன் காணப்படும் மணல் அச்சின் மேல், கீழ் பாகங்கள். இங்கு உள்ளகம் அச்சின் கீழ்ப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

பொறியியலாளரால் அல்லது வடிவமைப்பாளரால் வழங்கப்பட்ட வடிவமைப்பிலிருந்து மாதிரியுருவினை 'மாதிரியுரு உருவாக்குனர்' உருவாக்குவார். இது மரம், உலோகம் அல்லது பொலிஸ்டைரீன் போன்ற நெகிழியானால் ஆனதாக இருக்கும். உலோக வார்ப்பில் உலோகங்கள் கட்டியாகும் போது சுருங்குகின்றன. இது சிலவேளை குளிர்ச்சியடைகையின் சரிசமனற்ற தன்மையினால் சீராக இராது. எனவே மாதிரியுரு முடிவுப்பொருளை விட சற்றுப்பெரிதாக இருத்தல் வேண்டும், இது 'சுருக்க வரம்பு' எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்_அச்சில்_வார்த்தல்&oldid=1838649" இலிருந்து மீள்விக்கப்பட்டது