மணல்பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணல்பலகை என்பது பண்டைய கிரேக்க மாணவர்களின் கல்விக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மணல் நிரம்பிய கற்றல் கருவி.

தோற்றம்

பண்டைய கிரேக்கத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வடிவியல், கணக்கீடு மற்றும் எழுத்துகள் போன்றவற்றை ஆய்வுகள் செய்ய, இந்த மணல் பலகை உருவாக்கப்பட்டது.

இக்கருவியானது அபாக்கசிற்கு முன்னோடியாகும். இதில் கற்கள்போன்ற பொருள்கள் எண்ணிக் கற்பதற்காகச் சேர்க்கப்பட்டன. பின்னர் இடமதிப்புள்ள எண்கணிதத்திற்காக பத்திகள் சேர்க்கப்பட்டன. நவீன அபாக்கசு என்ற வார்த்தையின் வரையறைகளானது, தண்டுகள் மற்றும் மணிகள் கொண்ட ஒரு சட்டகமாக உலகளவில் விரிவடைந்துள்ளது. பொதுவாக எந்த வரையறையும் மணல் பலகை உள்ளடக்கியிருக்கவில்லை.

இந்த மணல்பலகை தற்போதுள்ள சில பலகை விளையாட்டுக்கு முன்னோடியாகவும் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பயன்பாடு

இராணுவத் திட்டமிடலுக்காகவும், புலம்பெயர்ந்தோர் குடியிருப்புக்காகவும் பயன்படுகிறது. 1890 ஆண்டு ராயல் மிலன் நகரில் கட்டாய இராணுவப் பயிற்சிகளைக் கற்பிப்பதற்காக மணல் பலகை அறை அமைக்கப்பட்டது. இன்று இம்மணல் பலகைகள் மெய்நிகராகவும் வழக்கமான மணல்பலகையாவும் பயன்படுத்தப்படுகிறது.

கல்வித்துறையில், முன்பருவக் கல்வி மாணவர்களுடன் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளும் கற்க உதவும் கருவியாக, இம்மணல்பலகை பயன்படுகிறது.

[1]

  1. "மணல்பலகை". பார்த்த நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்பலகை&oldid=2722879" இருந்து மீள்விக்கப்பட்டது