மணமகள் வாங்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணமகள் வாங்குதல் (Bride-buying) என்பது சில நாடுகளில் மணப்பெண்னை ஒரு சொத்தாக வாங்கும் தொழிலாக அல்லது வர்த்தகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்பழக்கம் வாங்குபவரின் விருப்பப்படி மணமகளை மறுவிற்பனை செய்ய அல்லது மீண்டும் வாங்கப்பட வாய்ப்புண்டாக்கும் நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது. சீனா, வட கொரியா, வியட்நாம் மற்றும் ஆபிரிக்கா போன்ற உலகின் சில பகுதிகளில் இந்த நடைமுறை தொடர்ந்து உறுதியாக பின்பற்றப்பட்டு வருகிறது. வசதிக்கான திருமணத்தின் ஒரு வடிவமாக விவரிக்கப்படும் இந்த நடைமுறை பல நாடுகளில் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

மணமகள் வாங்கியதற்கான முதல் பதிவு 1619 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வர்ச்சினியாவின் யேம்சு டவுன் நகரில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது [1]. யேம்சுடவுன் நகரில் முதலில் குடியேறியவர்களில் பிரத்தியேகமாக ஐரோப்பிய ஆண்கள் [2] என்றும் கருதப்படுகிறது. ஒரு கண்டத்தை அடிபணிய வைக்கும் கடுமையான மற்றும் பயங்கரமான வியாபாரத்தில் பெண்களுக்கு இடமில்லை [3] என்ற அப்போதைய நம்பிக்கையின் காரணமாக குடியேறியவர்களில் எல்லாம் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் ஆல்ப் யே மேப் சூனியர் நம்புகிறார். மேலும் குடியேறிய பகுதிகளில் பஞ்சம், நோய் மற்றும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவியதால் ஐரோப்பிய பெண்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறி காலனிக்கு பயணம் செய்வது பெரும் ஆபத்து என்று அஞ்சினர். மனைவிகளைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் பல ஆண்கள் காலனியை விட்டு வெளியேற முடிவு செய்தனர். காலனியிலிருந்து ஆண்கள் வெளியேறுவதைக் தடுப்பதற்காக அப்போதைய தலைவர்கள் பெண்களை ஐரோப்பாவிற்கு திரும்பி வருமாறு விளம்பரங்கள் செய்தனர். பெண்களை அவர்கள் காலனியில் குடியேற வேண்டும் என்று அழைப்பும் விடுத்தனர். திறமையான மணப்பெண்களை யேம்சுடவுன் காலனிக்கு திரும்ப வரவைப்பது கடினம் என்று உணர்ந்தனர். இருப்பினும் 17 ஆம் நூற்றாண்டில் நிலவிய திருமணத் தடைகள் காலனியில் இருந்த ஆண்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அமைந்தன. ஐரோப்பாவில் ஒரு சொந்த வீட்டை அடைவதும் உள்நாட்டில் ஒரு வீட்டைக் கட்டுவதும் மிகக் கடினமாகும். பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்வதற்காக குறிப்பிடத்தக்க சேமிப்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது அங்கு கட்டாயமாகும். தொழிலாள வர்க்க ஆங்கிலப் பெண்களில் பெரும்பாலோர் திருமணத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக உள்நாட்டு வேலைக்கு திரும்பினர். திருமண குடியேற்றம் மூலம் பல ஆண்டுகளுக்கு மிகக் குறைந்த ஊதியத்திற்காக மோசமான வேலைகளைச் செய்யும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டார்கள். வர்ச்சீனியா நிறுவனம் இங்கிலாந்தை விட்டு வெளியேறும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் காலனிக்கு ஆதரவாகப் பல்வேறு சலுகைகளை அளித்தது. அச்சலுகையின் படி கைத்தறி, ஆடைகள், ஒரு வீட்டுமனை, மற்றும் கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை போன்ற சலுகைகளை வழங்கியது. மணமகள் கணவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவர் வர்ச்சீனியா நிறுவனத்திற்கு 150 பவுண்டுகள் (70 கிலோ) "நல்ல புகையிலை (இன்றைய நாணயத்தில் சுமார் $ 5000 அமெரிக்க டாலருக்கு சமம்) செலுத்தி, மணமகளைக் காலனிக்கு அழைத்துச் செல்வார். இதனால் யேம்சுசுடவுன் மணப்பெண்களுக்கு "புகையிலை மணமகள்" என்ற புனைபெயர் வழங்கப்பட்டது.[4]

அஞ்சலில் மணமகள்[தொகு]

மணமகள் வாங்கும் பொதுவான நவீனவடிவங்களில் ஒன்று அஞ்சல் முறையில் மணமகள் வாங்குதலாகும். அஞ்சல் முறையில் மணப்பெண்களை விற்பனை செய்வதையும் வாங்குவதையும் நடத்த 90 முகவர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.[5]

இந்த முகவர்கள் கணவர்களைத் தேடும் 25,000 ஆயிரம் பெண்களின் முகவரிகள், புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் சுயசரிதைப் பட்டியல் போன்ற செய்திகளை வலைத்தளங்களில் பதிவுசெய்துள்ளனர். இந்த மணமகள்கள் பொதுவாக அமெரிக்க கணவர்களை விரும்புபவர்களாக உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து பல பெண்கள் இந்த வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள். ​​பெரும்பாலான அஞ்சல் முறை மணமகள்கள் உருசியா மற்றும் பிலிப்பீன்சு நகரிலிருந்து வந்தவர்களாகும். அஞ்சல் முறை மணமகள்கள் 10 சதவீதத்தினர் விருப்பத்துடன் இந்த முகவர்களை அணுகி தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். முகவர்கள் வழியாக ஒரு வருடத்தில் சுமார் 10,000 அஞ்சல் முறைத் திருமணங்கள் நடைபெறுவதாகவும், இந்த திருமணங்களில் சுமார் 4,000 அமெரிக்க ஆண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆசிய மணமகள் கொள்முதல்[தொகு]

சீனா[தொகு]

மணமகள் வாங்குவது சீனாவில் ஒரு பழைய பாரம்பரிய முறையாகும்.[6] இந்த நடைமுறை பெரும்பாலும் சீன பொதுவுடைமையாளர்களால் பின்பற்றப்பட்டது. மணமகள் வாங்கும் நவீன நடைமுறை கிராமப்புறங்களில் சாதாரணமாக நிகழ்கிறது.[7] இந்த நவீன நடைமுறையை கூலிப்படைத் திருமணம் என்று அழைக்கிறார்கள். அரசு சாரா அமைப்பான அனைத்து-சீன மகளிர் கூட்டமைப்பின் டிங் லூவின் கருத்துப்படி சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் காரணமாக இந்த நடைமுறை மீண்டும் தொடர்ந்தது.[6] 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் திருமணம் மற்றும் அடிமைகளாக விற்கப்பட்ட 88,000 பெண்கள் மற்றும் குழந்தைகளை சீன காவல்துறையினர் மீட்டனர். சம்பந்தப்பட்ட 143,000 கடத்தல்காரர்கள் பிடித்து சீன அரசு வழக்குத் தொடர்ந்து அவர்களை தண்டித்தது. சில மனித உரிமை குழுக்களின் கூற்றுப்படி அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல என்றும் கடத்தப்பட்ட பெண்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் சீன அரசு மேலும் அறிக்கை அளித்தது. பே பாங் மற்றும் மார்க் லியோங் என்ற இருவரின் அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கையின் படி மனைவிகளின் வர்த்தகத்தை ஒரு வெட்கக்கேடான பிரச்சினையாகவே சீன அரசு கருதுகிறது. சீன அரசு சில ஆண்டுகளாகத்தான் முக்கியத்துவம் கொடுத்து இந்த வர்த்தகத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இப் பெண்களின் மீது அதிக கவனம் செலுத்தி வர்த்தகத்தை விட அவர்களைக் காப்பாற்றவும் முயற்சி செய்துவருகிறது."[8] ஆனால் கிராமப்புற பெண்கள் வறுமையின் காரணமாக வேலைக்காக நகரங்களுக்குச் செல்வதால் கிராமங்களில் மணமகள் பற்றாக்குறை நிலவுகிறது.[6] நகரங்களில் வேலை தேடுவதற்காக பெண்கள் கிராமப்புறங்களை விட்டு வெளியேறி விடுகிறார்கள். இதனால் மனைவிகளுக்காக ஆசைப்படும் ஆண்கள் ஏமாற்றத்தையும் அல்லது அவர்களை கட்டாயப்படுத்தவும் முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்."

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகள்_வாங்குதல்&oldid=3448459" இருந்து மீள்விக்கப்பட்டது