மட்டிலா குருமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டிலா குருமூர்த்தி
குருமூர்த்தி, 2021-ல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்பல்லி துர்கா பிரசாத் ராவ்
தொகுதிதிருப்பதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூன் 1985 (1985-06-22) (அகவை 38)
மன்னசமுத்திரம் கிராமம், சித்தூர், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்நவ்யா கிரண்
பிள்ளைகள்2
பெற்றோர்(s)முன்னி கிருஷ்ணய்யா, இராமனாம்மா
வாழிடம்திருப்பதி
முன்னாள் கல்லூரிசிறீ வெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் நிறுவனம்
வேலைஅரசியல்வாதி• முடக்குநோய்சிகிச்சை மருத்துவர்

மட்டிலா குருமூர்த்தி (Maddila Gurumoorthy)(பிறப்பு 22 சூன் 1985) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேசத்தினைச் சார்ந்த தற்போதைய இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2020-ல், திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் பல்லி துர்கா பிரசாத் ராவ் இறந்ததைத் தொடர்ந்து 2021 ஏப்ரல் 17 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.[1][2][3][4]

நாடாளுமன்ற உறுப்பினராக[தொகு]

2021ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமியினை எதிர்த்து ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2,71,592 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.[5] இவர் [6] மே 2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். நாடாளுமன்றத்தில் இவரது தனிப்பட்ட வருகை 91% ஆகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raghavan, Sandeep (17 March 2021). "YSR Congress announces Dr Gurumoorthy's name for Tirupati Lok Sabha by-election". பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
  2. "తిరుపతి ఉప ఎన్నికలో వైఎస్సార్‌సీపీ భారీ విజయం". Sakshi (in தெலுங்கு). 2 May 2021.
  3. Prasad, Pv (2 May 2021). "Tirupati By Election Results: YSRCP candidate wins with a thumping majority of 2.70 lakh votes". thehansindia.com (in ஆங்கிலம்).
  4. "YSRCP Tirupati MP Candidate Gurumoorthy Biography" (in அமெரிக்க ஆங்கிலம்). Telugu Aha!. May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.
  5. "YSRCP's M Gurumoorthy wins Tirupati Lok Sabha bye-poll". The News Minute (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  6. "YSRCP's M Gurumoorthy wins Tirupati Lok Sabha bye-poll". The News Minute (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  7. "Maddila Gurumoorthy | PRSIndia". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டிலா_குருமூர்த்தி&oldid=3443678" இலிருந்து மீள்விக்கப்பட்டது