மட்டாஞ்சேரி பாலம்
மட்டாஞ்சேரி பாலம் (Mattancherry Bridge) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் 25.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலமாகும்.[1] கொச்சின் பிரதான நிலப்பகுதியை இப்பாலம் வில்லிங்டன் தீவுடன் இணைக்கிறது. பாலம் 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்குமுன் 1940 ஆம் ஆண்டில் இதே பெயரில் ஒரு பாலம் இங்கு கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் இப்போது இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே செல்கின்றன.
கட்டு-இயக்கு-மாற்று ஒப்பந்தம் மூலம் மட்டாஞ்சேரி பாலம் முதன் முதலாக கேரளாவில் கட்டப்பட்டது. கேரள அரசின் கொச்சின் மேம்பாட்டு ஆணையம் மற்றும் காமன் இந்தியா நிறுவனம் ஆகியோருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு கூட்டு திட்டமாக பாலம் கட்டப்பட்டது.[2]
பழைய பாலம்
[தொகு]பழைய மட்டாஞ்சேரி பாலம் 1940 ஆம் ஆண்ட்டு சர் ராபர்ட் சார்லசு பிரிசுடோவால் கட்டப்பட்டது. இந்த பாலம் வில்லிங்டன் தீவை கொச்சி கோட்டையுடன் இணைத்து வேம்பநாடு ஏரியைக் கடக்கிறது. எஃகு மற்றும் மரத்தைப் பயன்படுத்தி 16 கண் இடைவெளிகளுடன் இந்த பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் மைய இடைவெளி சுருள் பொறிமுறையைப் பயன்படுத்தி உயர்த்திக் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட்ட இலண்டனில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பிரித்தானிய கட்டுமானத்தை ஒத்திருப்பதால் பழைய பாலம் கொச்சியின் லண்டன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
பழைய பாலம் 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 அன்று தொடங்கப்பட்டது, பின்னர் இது தேசிய நெடுஞ்சாலை எண்-47 இன் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது பாலம் மூடப்பட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் மட்டுமே பாலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ News Hindu
- ↑ Kumar, K.G. (2003-10-14). "BOT, the norm now". The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/2003/10/14/stories/2003101400511700.htm.