மட்டனூர் சங்கரன் குட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டனூர் சங்கரன் குட்டி
Mattanur Sankarankutty
GKN Mattannoor Sankarankutty Marar DSC07191b.JPG
மட்டனூர் சங்கரன் குட்டி மரார், திரிச்சூர் பூரம் 2010.
பிறப்பு25 ஆகத்து 1954
மட்டனூர், கண்ணூர், கேரளம், இந்தியா
பணிதாள இசை, தயாம்பகா
செயற்பாட்டுக்
காலம்
1970-முதல் இன்னும்
பெற்றோர்குங்கிகிருட்டிணா மரார்
கார்த்தியாயனி மராசியார்
வாழ்க்கைத்
துணை
பாரதி
பிள்ளைகள்மட்டனூர் சிறீகாந்து மரார்
மட்டனூர் சிறீராச்சு மரார்
விருதுகள்பத்மசிறீ-2009
சங்கீத நாடக அகாதமி விருது-2012

மட்டனூர் சங்கரன் குட்டி (Mattanur Sankarankutty) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாள இசைக் கலைஞரவார். எம்.பி. மட்டனூர் சங்கரன் குட்டி மரார் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். கண்ணூர் மாவட்டத்தில் தலசேரிக்கு அருகிலுள்ள மட்டனூரில் இவர் பிறந்தார்.[1] பாரம்பரிய கேரள தாள இசைக்கருவியான செண்டை மேளம். பஞ்சரி மேளம், பஞ்ச வாத்தியம், தயாம்பகா ஆகிய தாள இசைக் கருவிகளை வாசிப்பார். 2009 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை சங்கரன் குட்டிக்கு வழங்கி சிறப்பித்தது.[2] 2012 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கப்பட்டது.[3]

மலப்புரம் மாவட்டத்தில் திருரைச் சேர்ந்த பாரதி என்பவரை சங்கரன் குட்டி மணந்தார். இவர்களுக்கு மட்டனூர் சிறீகாந்த் மற்றும் மட்டனூர் சிறீராச்சு என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சிறீகாந்த் மற்றும் சிறீராச் இருவரும் பிரபலமான தையம்பகா இசைக் கலைஞர்களாவர்.[4][5] மேலும் இவர்களுக்கு சரண்யா என்ற மகளும் உள்ளார். மூன்று குழந்தைகளும் திருமணமாகி நன்கு வாழ்ந்து வருகிறார்கள்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kaladharan, V. (2005-11-04). "Heir to a proud musical legacy". தி இந்து. Archived from the original on 2012-11-07. https://web.archive.org/web/20121107203103/http://www.hindu.com/thehindu/fr/2005/11/04/stories/2005110401920200.htm. 
  2. http://pib.nic.in/release/release.asp?relid=46983
  3. "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. 30 May 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. https://www.thehindu.com/entertainment/theatre/when-the-drums-speak/article30933911.ece The Hindu: When the drums speak
  5. https://www.thehindu.com/entertainment/art/chenda-maestro-mattannoor-sankarankutty-marars-beats-of-ebullience/article30276795.ece