மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல், 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2006 மார்ச் 30 ஆம் நாள் இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்ற போது பிற்போட்டப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல், 2008 மார்ச் 10 ஆம் நாள் நடைபெற்றது.1994 ம் ஆண்டின் பின்னர் 14 வருடம் கழித்து இத் தேர்தல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கவிடயமாகும். இத்தேர்தல் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளுராட்சி மன்றங்களுக்கு 101 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்பட்டது. இத்தேர்தலில் வாக்களிக்க 270,471 பேர் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுகள் 291 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்றது. தேர்தல் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் மற்றும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ரி.கிருஷ்ணானந்தலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.[1][2]. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இத்தேர்தலைப் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரங்கள்[தொகு]

பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தன. இலங்கை தேர்தல் சட்டத்தின் படி வாக்களிப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மார்ச் 7 ஆம் நாள் நள்ளிரவோடு தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன.[3]

தாபால் மூல வாக்கெடுப்பு[தொகு]

தேர்தலுக்கு முன்னதாக பெப்ரவரி 21 22 ஆம் நாட்களில் தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் போது 934 வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.[4]

தேர்தல் முடிவுகள்[தொகு]

மட்டக்களப்பு மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியதோடு ஏனைய 8 பிரதேச சபைத் தேர்தல்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றனர்.[5]

மட்டக்களப்பு மாநகரசபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14158 11
சுயேட்சைக்குழு [6] 9601 6
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1788 1
ஈழவர் ஜனநாயக முன்னணி 427 1

போரதீவுபற்று பிரதேச சபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 7089 7
சுயேட்சைக்குழு [6] 3501 2

மண்முனைதெற்கு எருவில்பற்று பிரதேச சபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 10047 7
சுயேட்சைக்குழு [6] 5615 3

மண்முனைதென்மேற்கு பிரதேச சபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 6371 8
சுயேட்சைக்குழு [6] 1401 1

மண்முனைப்பற்று பிரதேச சபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 9373 7
சுயேட்சைக்குழு [6] 2816 2

ஏறாவுர்பற்று பிரதேசசபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 15851 10
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3479 2
சுயேட்சைக்குழு [6] 2485 1
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2478 1

கோறளைப்பற்று பிரதேசசபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 12299 6
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 5218 2
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4249 2
சுயேட்சைக்குழு [6] 2820 1

மண்முனை மேற்கு பிரதேசசபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 4644 6
சுயேட்சைக்குழு [6] 3981 3

கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபை[தொகு]

கட்சி பெற்ற வாக்குகள் ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 7331 10
சுயேட்சைக்குழு [6] 528 1

தேர்தலின் பின்னரான நிலமைகள்[தொகு]

இத் தேர்தல்முடிவுகளை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.இலங்கை அமைச்சர்கள் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவுமாறு உலக நாடுகளை கேட்டிருக்கின்றது.[1]

விடுதலைப் புலிகள் கருத்து[தொகு]

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். இத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என்றும் துணை இராணுவக் குழுவின் ஆதரவுடன் இந்த அரசாங்கத்தால் மட்டக்களப்பு களங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்[7].

ஐக்கிய தேசியக் கட்சி கருத்து[தொகு]

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தல் முடிவுகளை நிராகரித்ததுடன் இலங்கை மக்களையும் வெளியுலகையும் ஏமாற்ற நடத்தப்பட்ட ஒரு நாடகம் என வர்ணித்துள்ளது[8].

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்[தொகு]

மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களை எதிரும் புதிருமாக தேர்தல் களத்தில் இறக்கி மோசடியான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது[9].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வாக்காளர் அட்டை தயாரிப்பு பணிகள்" (in தமிழ்). அதிரடி.காம். ஜனவரி 24, 2008. http://athirady.com/?p=15125. பார்த்த நாள்: 2008-03-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 12 சுயேற்சைகள் நேற்று கட்டுப்பணம் செலுத்தின" (in தமிழ்). அதிரடி.காம். ஜனவரி 19, 2008. Archived from the original on 2008-01-21. https://web.archive.org/web/20080121215913/http://athirady.com/?p=14873. பார்த்த நாள்: 2008-03-11. 
  3. "தேர்தல் தொடர்பான அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12மணியுடன் நிறைவு" (in தமிழ்). நிதர்சனம்.நெட். 07-03-2008. http://nitharsanam.net/?p=13987. பார்த்த நாள்: 2008-03-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்றும் நாளையும்!" (in தமிழ்). நிதர்சனம்.நெட். 21-02-2008. http://nitharsanam.net/?p=13591. பார்த்த நாள்: 2008-03-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் - 2008" (in தமிழ்). நிதர்சனம்.நெட். 11-03-2008. Archived from the original on 2008-03-12. https://web.archive.org/web/20080312093752/http://nitharsanam.net/?p=14202. பார்த்த நாள்: 2008-03-11. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 6.8 ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் (பத்மநாபா) ஆகியவை உள்ளடங்கிய குழு
  7. மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஐனநாயகத்தை அழிக்கும் ஒரு செயற்பாடு: விடுதலைப் புலிகள்
  8. "UNP rejects Batti poll results". 2008-03-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-03-12 அன்று பார்க்கப்பட்டது.
  9. "ஆயுதக்குழுக்களை தேர்தல் களத்தில் இறக்கி நடத்தப்பட்ட மோசடியான மட்டு. தேர்தல்: த.தே.கூ. கண்டனம்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-03-14 அன்று பார்க்கப்பட்டது.