மட்டக்களப்பு மான்மியம் (ஓர் ஆராய்ச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மட்டக்களப்பு மான்மியம் (ஓர் ஆராய்ச்சி)
நூலாசிரியர்திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைவரலாற்று ஆராய்ச்சி
வெளியீட்டாளர்சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்
வெளியிடப்பட்ட நாள்
1993
பக்கங்கள்XI + 215

மட்டக்களப்பு மான்மியம் (ஓர் ஆராய்ச்சி) என்னும் நூல் மட்டக்களப்பு வரலாற்றைக் கூறும் நூலாகிய மட்டக்களப்பு மான்மியம் பற்றிய சமகால ஆய்வு நூலாகும். மட்டக்களப்பு மான்மியம் கூறும் வரலாற்று ஆய்வு செய்து விபரித்து, மெய்ப்பிப்பது இந்நூலினது சிறப்பம்சமாகும். இது மட்டக்களப்பு மான்மியத்திற்கு விளக்கவுரை போன்று அமைந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விடயம் என்னவென்றால், வழக்கிழந்துபோன சொற்கள் புதிதாக விளக்கப்பட்டுள்ளன. இது மான்மியத்தையும் மட்டக்களப்பு வரலாற்றையும் இலகுவாக விளங்கிக் கொள்ள வழி செய்கிறது.[1]

நூலின் பிரதான பகுதிகள்[தொகு]

  • இயல் 1: மட்டக்களப்பு மான்மியம் வரலாற்று மதிப்பீடு
  • இயல் 2: மட்டக்களப்பு மான்மியம் விபரிக்கும் அரச குடிவழிகள்
  • இயல் 3: மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடுகின்ற அரசியலமைப்பு, சமூக வரலாறு, முற்குகர் சட்டம்
  • இயல் 4: மட்டக்களப்பு மான்மியம் ஊரும் பேரும்
  • இயல் 5: மட்டக்களப்பு மான்மியம் விபரிக்கும் சாதியமைப்புக்கள்
  • இயல் 6: மட்டக்களப்பில் தென்னிந்திய - கிழக்கிந்திய சைவமதப் பண்பாடுகளும், பிற வழிபாட்டு நெறிகளும்
  • இயல் 7: மட்டக்களப்பு மான்மியம் கால ஆய்வுகள்

உசாத்துணை[தொகு]

  1. "பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!". 28 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]