மடு வீதி
Appearance
மடுவீதி அல்லது மடுறோட் என்பது, இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இடத்தைக் குறிக்கும். இது புளியடி இறக்காமம் - மடு வீதி, மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப்படும் ஏ-14 நெடுஞ்சாலையைச் சந்திக்கும் இடத்தை அண்டி அமைந்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாளுவரையர்கட்டையடம்பன் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகிறது.
மதவாச்சி, தலைமன்னார் ஆகிய இடங்களை இணைக்கும் தொடருந்துப் பாதை இவ்விடத்தினூடாகச் செல்வதுடன் இங்கே ஒரு தொடருந்து நிலையமும் அமைந்துள்ளது. புகழ் பெற்ற மடு மாதா கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு யாத்திரை செல்வோர் இந்தத் தொடருந்து நிலையத்தில் இறங்கிப் பேருந்து மூலம் தேவாலயத்துக்குச் செல்வர்.