மடு கல்வி வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மடு கல்வி வலயம் (Madhu educational zone) என்பது இலங்கையின் கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் ஓர் கல்வி வலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள 12 கல்வி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[1] இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பரீட்சைகள் நடாத்துதல், ஆசிரியர், அதிபர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளையும் இக்கல்வி வலயமே மேற்கொண்டு வருகின்றது. மேலும் இலங்கையின் நிருவாக மாவட்டமான மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள இரு கல்வி வலயங்களில் இதுவும் ஒன்று ஆகும். மற்றையது மன்னார் கல்வி வலயம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "It works under the Ministry of Education, Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடு_கல்வி_வலயம்&oldid=3223485" இலிருந்து மீள்விக்கப்பட்டது