மடம் செம்பரசனப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடம் செம்பரசனப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635117

மடம் செம்பரசனப்பள்ளி (Madam Cembarasanapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது செம்பரசனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது சூளகிரி-காளிங்கவாரம் சாலையில் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், சூளகிரியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 284 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

வரலாறு[தொகு]

இந்த ஊரில் மடம் ஒன்று உள்ளது. சுக்னாமூர்தி சுவாமிகள் 101 மடங்களை அமைத்து ஆன்மீகத் தொண்டாற்றினார் எனவும், அவர் அமைத்த 101வது மடம் இது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மடம் 500 ஆண்டுகள் பழமையானது எனப்படுகிறது. இந்த மடத்தை அமைத்த சுக்னாமூர்தி சுவாமிகள் இங்கேய தங்கி இருந்து ஜீவசமாதி அடைந்தார் எனப்படுகிறது. இங்கு அவரின் ஜீவசமாதி உள்ளது. மேலும் அவரின் வழிவந்த நான்கு சீடர்களின் சமாதிகளும் இங்கு உள்ளன. இந்த ஊருக்கு பகத்திலேயே செம்பரசனப்பள்ளி ஊர் உள்ளது. காலப்போக்கில் செம்பரசனப்பள்ளியில் இருந்த மக்கள் இங்கு குடியேறினர். மடம் இருந்த காரணத்தினால் இந்த ஊர் மடம் செம்பரசனப்பள்ளி என்ற பெயரைப் பெற்றது என்று கூறப்படுகிறது.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Madam Cembarasanapalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  2. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 133-146. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடம்_செம்பரசனப்பள்ளி&oldid=3662366" இலிருந்து மீள்விக்கப்பட்டது