மடடாயோ
மடடாயோ | |
---|---|
இயக்கம் | அகிரா குரோசாவா |
தயாரிப்பு | யூசோ இரி யோ யமமோட்டோ |
கதை | அகிரா குரோசாவா இஷிரோ ஹோண்டா உச்சிடா கியகென் (கட்டுரைகள்) |
இசை | சினிச்சிரோ இக்கபே |
நடிப்பு | டட்சுவோ மட்சுமுரா Kyôko Kagawa ஹிசாஷி இகாவா ஜொஜி டொகோரோ |
விநியோகம் | Toho Company Ltd. |
வெளியீடு | 17 சித்திரை 1993 |
ஓட்டம் | 134 நிமிடங்கள். |
மொழி | ஜப்பானிய மொழி / ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $11,900,000 |
மடாடாயோ (Madadayo) 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் உலகின் அதிசிறந்த கலைப்பட இயக்குநர்களில் ஒருவரான அகிரா குரோசாவாவின் இயக்கத்தில் வெளிவந்த இறுதித் திரைப்படமாகும்.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பிரபல ஜப்பானிய எழுத்தாளரும் ஆசிரியருமான உச்சிடா கியகென் (1889-1971) ஜேர்மனிய ஆசிரியப் பதவியில் இருந்து விலகுவதிலிருந்து ஆரம்பிக்கும் இத்திரைப்படம் மேலும் அவரது பழைய மாணவர்கள் அவருக்கு வழங்கும் சிறப்பு விழாவொன்றில் கலந்து கொள்ளும் வரை காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.மடாடோயிவின் அர்த்தம் என்னவெனில் "இன்னமும் ஆயத்தமில்லையா" என்பது பொருள் இதனை இவரது மாணவர்கள் அவரது சிறப்பு விருந்தில் கேட்டனர்.அதாவது இன்னமும் சாவதற்கு ஆயத்தமில்லையா.அவ்வாசிரியரும் சாவு வெகு விரைவில் உள்ளது மேலும் வாழ்க்கை இன்னும் உள்ளது என உரக்கக் கூறுகின்றார்.மேலும் இத்திரைப்படம் அவரின் புதிய வீட்டு மாற்றம் மற்றும் தனது பூனையொன்றின் தொலைவு போன்றவற்றில் திரைக்கதை நகர்கின்றது.