மடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி
மடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | அக்ரோசெபாலிடே
|
பேரினம்: | அக்ரோசெபாலசு
|
இனம்: | A. newtoni
|
இருசொற் பெயரீடு | |
Acrocephalus newtoni (ஹார்ட்லாப், 1863) | |
![]() |
மடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி (Madagascar swamp warbler)(அக்ரோசெபாலசு நியூடோனி) என்பது அக்ரோசெபாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் சதுப்புநிலங்கள் ஆகும்.
விளக்கம்
[தொகு]மடகாசுகர் சதுப்புநில கதிர்க்குருவி குட்டையான, வட்டமான இறக்கைகள் மற்றும் நீண்ட அலை அலையான் வாலினைக் கொண்ட கதிர்க்குருவி ஆகும். இதன் இறக்கைகள் மற்றும் வால் உட்பட அடர் சாம்பல்-பழுப்பு முதல் அடர் பழுப்பு வரையிலான மேல்பகுதியுடன் காணப்படும்.
அடிப்பகுதி சாம்பல்-வெள்ளை நிறத்தில் இருக்கும், ஆனால் பக்கவாட்டு மற்றும் வயிறு வெளிர் பழுப்பு-சாம்பல் நிறத்தில் இருக்கும். கன்னம், தொண்டை மற்றும் மேல் மார்பகம் பொதுவாகப் பழுப்பு-சாம்பல் கோடுகளுடன் இருக்கும். ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாக வேறுபாடின்றி காணப்படும்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Acrocephalus newtoni". IUCN Red List of Threatened Species 2016: e.T22714865A94431069. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714865A94431069.en. https://www.iucnredlist.org/species/22714865/94431069. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ HANDBOOK OF THE BIRDS OF THE WORLD Vol 11 by Josep del Hoyo, Andrew Elliott and David Christie - Lynx Edicions - ISBN: 849655306X
- ↑ Reed and Bush Warblers Par Peter Kennerley, David Pearson – Helm Identification Guide – Editeur: A&C Black, 2010 – ISBN: 1408134012, 9781408134016
- ↑ Birds of Madagascar and the Indian Ocean Islands Par Roger Safford, Adrian Skerrett, Frank Hawkins – ISBN: 1472924118, 9781472924117- Editeur: Bloomsbury Publishing, 2015