மஞ்சுளா பிரதீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சுளா பிரதீப் (Manjula Pradeep இந்தி: मंजुला प्रदीप ) ஓர் இந்திய மனித உரிமை ஆர்வலர் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய தலித் உரிமை அமைப்புகளில் ஒன்றான நவ்சார்ஜன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆவார் , சாதி பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடு ஆகிய பிரச்சினைகளுக்கான சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்..

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மஞ்சுளா பிரதீப் அக்டோபர் 6, 1969 அன்று குஜராத்தில் உள்ள வதோதராவில் (முன்பு பரோடா என்று அழைக்கப்பட்டது) ஒரு பாரம்பரிய தலித் குடும்பத்தில் பிறந்தார், இவரது குடும்பம் 1968 இல் உத்தரபிரதேசத்திலிருந்து [1] இவளுடைய தந்தை இரண்டாவது மகளுக்குப் பதிலாக ஒரு மகனை எதிர்பார்த்ததால் இவளுடைய பிறப்பு ஏமாற்றத்தை தந்தது. இவர் பிறந்ததற்கு மஞ்சுளாவின் தாயை குற்றம் சாட்டினார் மற்றும் இவர் பிறந்ததிலிருந்து இருவரையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார்.[2] மஞ்சுளாவும் தனது சிறுவயதில் நான்கு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.[3]

சாதி பாகுபாட்டிற்கு பயந்து, மஞ்சுளாவின் தந்தை இவர்களின் குடும்பப்பெயரை மறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக 'பிரதீப்' என்ற பொதுவான பெயரை குடும்பப்பெயராக எடுத்துக் கொண்டார்.[4] இருப்பினும், அது மஞ்சுளாவை பள்ளியில் பாகுபாடு செய்வதில் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. இவளுடைய ஆசிரியர்கள் மற்றும் சகாக்கள் இவளது சாதி காரணமாக அடிக்கடி கேலி செய்தனர்; மாணவர்கள் இவளை "ஏபிசி" என்று அழைப்பார்கள், "பிசி" அல்லது "பிற்படுத்தப்பட்ட சாதி" என்று குறிப்பிடுவார்கள். [5]

வீட்டிலும் சமூகத்திலும் மஞ்சுளா எதிர்கொண்ட சவால்கள் சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டை கேள்விக்குள்ளாக்கியது, இவரது எதிர்கால வாழ்க்கை மற்றும் செயல்பாட்டின் பாதையை வடிவமைத்தது. [6]

கல்வி[தொகு]

இளங்கலை படிப்பின் போது, இவளுடைய பேராசிரியர் ஒருவர் மஞ்சுளாவை சமூகப் பணிகளில் ஈடுபட ஊக்குவித்தார். இது 1990 இல் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற மஞ்சுளாவைத் தூண்டியது பல்கலைக்கழகத்தில்தான், இவர் தலித் அரசியலின் ஆண் ஆதிக்கத்தினை எதிர்க்கத் துவங்கினார், மேலும் தலித் மற்றும் பெண்ணிய செயல்பாட்டில் ஈடுபட்டார். [7]

நவ்சர்ஜனில் பணிபுரியும் போது, இவரது முதல் வழக்கு ஒரு தலித் பெண்ணின் மகன் கொல்லப்பட்ட வழக்கு, அகமதாபாத் காவல் நிலையத்தில் காவல் துறையினரின் காவலில் இருந்த போது துன்புறுதலுக்குப் பிறகு இவர் கொலை செய்யப்பட்டார். [6] இந்த சம்பவம் மஞ்சுளா கல்விச் சாலையில் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற வழிவகுத்தது, ஏனென்றால் தலித் உரிமை பிரச்சனை தெருக்களிலும் நீதிமன்றங்களிலும் போராடப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார்.

தொழில்[தொகு]

1992 இல் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, மஞ்சுளா பிரதீப் 21 வயதில் நவ்சர்ஜன் அறக்கட்டளையில் முதல் பெண் ஊழியராக சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில், இவர் அமைப்பின் நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

நவ்சர்ஜன் அறக்கட்டளையின் ஆரம்ப ஆண்டுகள்[தொகு]

நவ்சர்ஜனில் இவரது முதல் வேலை சட்ட உதவித் திட்டமாகும், இது வன்முறை மற்றும் பாகுபாட்டிலிருந்து தப்பியவர்களுக்கு நீதிக்காக போராட உதவியது. மக்களின் மனித உரிமைகளை திறம்பட பாதுகாக்க , சட்டத்தை படிக்க வேண்டும் என்பதை மஞ்சுளா உணர்ந்தார். "எந்தவொரு அதிகாரத்தையும் பெறுவதற்கு நான் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டும் ... எனவே என் தேவை சட்டப் பட்டம் தான். ” என்று கூறினார்.

சான்றுகள்[தொகு]

  1. BROKEN CAN HEAL: The Life and Work of Manjula Pradeep of India (PDF). Joan B. Kroc Institute for Peace & Justice, University of San Diego, USA. 2011.
  2. "Manjula Pradeep". defindia.org.
  3. "INTERVIEW: MANJULA PRADEEP". In Plain Speak. http://www.tarshi.net/inplainspeak/interview-manjula-pradeep/. 
  4. "INTERVIEW: MANJULA PRADEEP". In Plainspeak. http://www.tarshi.net/inplainspeak/interview-manjula-pradeep/. 
  5. 5.0 5.1 BROKEN CAN HEAL: The Life and Work of Manjula Pradeep of India (PDF).
  6. 6.0 6.1 . 
  7. "India's Dalit Moment". CUNY Academic Works. https://academicworks.cuny.edu/cgi/viewcontent.cgi?referer=https://www.google.co.in/&httpsredir=1&article=1169&context=gj_etds. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுளா_பிரதீப்&oldid=3286258" இலிருந்து மீள்விக்கப்பட்டது