மஞ்சுளா செல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சுளா செல்லூர் (Manjula Chellur பிறப்பு 5 டிசம்பர் 1955) மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி . கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் , கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகவும் இருந்தார். இவர் டிசம்பர் 4, 2017 அன்று பணி ஓய்வு பெற்றார் .[1] [2] [3]

தகுதிகள்[தொகு]

மஞ்சுளா செல்லூர் கர்நாடகாவில் பிறந்தார்.இவர் பெற்றார் பெல்லாரி, அல்லும் சங்கலம்மா பெண்கள் கல்லூரியில்,இளங்கலைப் பட்டம் பெற்றார். பெம்க்களூரிவில் உள்ளா ரேணுகாச்சார்யா சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 1977 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் பாலினம் மற்றும் சட்ட ஆய்வ்தவித் தொகையினைப் பெற்றார். [1] 2013 இல் மஞ்சுளா செல்லூர் கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார். [4]

தொழில்[தொகு]

மஞ்சுளா செல்லூர் , பெல்லாரியில் சட்டம் பயின்ற முதல் பெண் வழக்கறிஞர் ஆனார். இவர் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார், இவர் குடிசார் மற்றும் குற்றவியல் சட்டத்தை உள்ளூர் பெல்லாரி நீதிமன்றங்களில் பயிற்சி செய்தார். [1]

1988 இல் இவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் கோலார் மற்றும் மைசூருக்கான முதன்மை மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றினார். இந்த பதவிகளுக்கு மேலதிகமாக இவர், நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பெங்களூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாகவும் இருந்தார். 21 பிப்ரவரி 2000 அன்று இவர் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். [1]

மஞ்சுளா செல்லூர் , 21 ஜூன் 2008 முதல் 25 மார்ச் 2010 வரை கர்நாடக நீதி அகாதமியின் தலைவராக பணியாற்றினார். இவர் கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும் இருந்தார். 9 நவம்பர் 2011 அன்று இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் [5] மற்றும் 26 செப்டம்பர் 2012 முதல் இவர் கேரளாவின் தலைமை நீதிபதியாக உள்ளார்.[3]

உயர்நிலை வழக்குகள்[தொகு]

2013 ஆம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு , மாநிலங்களவையின் துணைத் தலைவர் பி. ஜே. குரியனுக்கு எதிரான பலாத்கார வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது. [6] மேலும் மார்ச் 2013 ல், "பனிக்கூழ் கடை நாசவேலை வழக்கு " தொடர்பான மற்றொரு விசாரணையில் முன்கூட்டியே விசாரணைக்காக முக்கிய மார்க்சிய அரசியல்வாதியும் எதிர்க்கட்சித் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தனின் வேண்டுகோளை நீதிபதிகள் நிராகரித்தனர். 1990 களில் குழந்தைகள் மற்றும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதற்காக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. [7]

2017 ல் ஒரு வழக்கில் உடல்ரீதியான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருத்துவர்களிடம் இவர்கள் அடிப்பதற்கு பயப்படுகிறார்கள் என்றால் அவர்கள் ராஜினாமா செய்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறினார். பாதுகாப்பான பணிச்சூழலைக் கோரி, இந்த தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற வேண்டி, குடியிருப்பு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிபதியின் இந்தக் கூற்றினால் மனுதாரர்கள் கோபமடைந்தனர் மற்றும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றால் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இப்படி நடந்துகொண்டால் என்ன செய்வது என்று எதிர்த்தனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு சென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது இவரது உறவினர்கள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் எங்களைத் தாக்கியது போல் இவர்களையும் தாக்கினால் இவர்கள் என்ன செய்வார்கள் என்ரு மருத்துவர்கள் கேள்வி எழுப்பினர். [8]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Kerala High Court (2013). "Website Kerala High Court". Kerala High Court. 29 June 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Express News Service (27 September 2012). "Manjula Chellur sworn in as Kerala HC CJ". The New Indian Express. 12 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 Venkatesan, J. (31 August 2012). "Manjula Chellur to be Chief Justice of Kerala High Court". The Hindu. 1 November 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2013 அன்று பார்க்கப்பட்டது.Venkatesan, J. (31 August 2012). "Manjula Chellur to be Chief Justice of Kerala High Court". The Hindu. Archived from the original on 1 November 2012. Retrieved 26 March 2013.
  4. Express News Service (4 March 2013). "Honorary Doctorates for 5 Women". The New Indian Express. 7 March 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Manjula Chellur Acting Chief Justice". The Hindu. 8 November 2011. 28 June 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Suriyanelli rape case: Kerala HC asks govt to file statement against Kurien". First Post. 11 March 2013. 7 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Kerala HC turns down Achuthanandan plea". WebIndia123. 26 March 2013. 4 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Resign and stay at home if you are so scared: High court to Doctors". timesofindia.com. 26 March 2017. 4 June 2021 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுளா_செல்லூர்&oldid=3288185" இருந்து மீள்விக்கப்பட்டது