உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சித் திவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சித் திவானா (Manjit Tiwana) பஞ்சாபி கவிதைகளுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற இந்தியப் பெண் கவிஞர் ஆவார்.

பிறப்பு

[தொகு]

இவர் 1947 ஆம் ஆண்டு இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தார்.[1]

கவிதைகள்

[தொகு]

மஞ்சித் திவானாவுக்கு பதினாறு வயதாக இருந்தபோது அவரது முதல் கவிதை நாகமணி யில் வெளியிடப்பட்டது. மஞ்சித் ஏழு கவிதைத் தொகுப்புகளை பஞ்சாபி மொழியில் எழுதியுள்ளார், அவற்றில் குறிப்பிடத்தக்கவை: இல்காம் (1976), இல்சாம் (1980), தனான் டி சூன் (1982), உனிடா வர்த்மான் (1987), சாவித்ரி (1989) மற்றும் ஜின் பிரேம் கியோ.[2]

விருதுகள்

[தொகு]

1990 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது [3] இவரது உனிடா வர்த்மான் என்ற கவிதைக்கு வழங்கப்படது. மேலும் 1999 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில மொழிகள் துறையால் இவருக்கு சிரோமணி பஞ்சாபி கவி புரசுகார் விருது[4] வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Manjeet Tiwana - SikhiWiki, free Sikh encyclopedia". www.sikhiwiki.org. Retrieved 2025-03-09.
  2. "Yahoo | Mail, Weather, Search, Politics, News, Finance, Sports & Videos". Archived from the original on 26 October 2009.
  3. "Awards & fellowships-Akademi Awards". www.sahitya-akademi.gov.in. Archived from the original on 2008-08-18.
  4. "The Tribune, Chandigarh, India - Punjab".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சித்_திவானா&oldid=4223700" இலிருந்து மீள்விக்கப்பட்டது