மஞ்சள் புருவக் காட்டுச்சில்லை
| மஞ்சள் புருவக் காட்டுச்சில்லை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பசாரிபார்மிசு |
| குடும்பம்: | எம்பெரிசிடே |
| பேரினம்: | எம்பெரிசா |
| இனம்: | எ. கிரைசோப்ரிசு |
| இருசொற் பெயரீடு | |
| எம்பெரிசா கிரைசோப்ரிசு பாலாசு, 1776 | |
மஞ்சள் புருவக் காட்டுச்சில்லை (Yellow-browed bunting-Emberiza chrysophrys-எம்பெரிசா கிரைசோப்ரிசு) என்பது காட்டுச்சில்லை குடும்பமான எம்பெரிசிடேயில் உள்ள ஒரு குருவிச் சிற்றினம் ஆகும். இது இப்போது பெரும்பாலான நவீன வகைப்பாட்டியல் வல்லுநர்களால் பிரிஞ்சிலிடேவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. எம்பெரிசா என்ற பேரினத்தின் பெயர் பழைய செருமன் எம்பிரிட்சு என்ற ஒரு முட்செடியின் பெயரிலிருந்து வந்தது. குறிப்பிட்ட சிற்றினப் பெயரான கிரைசோப்ரிசு பண்டைய கிரேக்க குருசோப்ரசு, "தங்க-புருவம்" என்பதிலிருந்து வந்தது.[2]
பரவல்
[தொகு]மஞ்சள் புருவக் காட்டுச்சில்லை கிழக்கு சைபீரியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை இடம்பெயர்ந்து, மத்திய, தெற்கு சீனாவில் குளிர்காலத்தில் வாழ்கிறது. இது மேற்கு ஐரோப்பாவிற்கு மிகவும் அரிதான அலைந்து திரிவதாகும்.
இனப்பெருக்கம்
[தொகு]மஞ்சள்-புருவக் காட்டுச்சில்லை தைகா மண்டலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் ஒரு தாவரக் கூடு ஒன்றில் நான்கு முட்டைகளை இடுகிறது. காடுகளில் வாழும் முதிர்ச்சியடைந்த குருவிகள் விதைகளை உணவாக உட்கொள்கிறது. இவை பூச்சிகளை உணவாக குஞ்சுகளுக்கு அளிக்கின்றன.
விளக்கம்
[தொகு]மஞ்சள் புருவக் காட்டுச்சில்லை நாணல் காட்டுச்சில்லையினை விட சிறியது. ஆனால் ஒப்பீட்டளவில் பெரிய தலையினைக் கொண்டது. மேற்பகுதி பழுப்பு நிறமாகவும், அதிக கோடுகள் கொண்டதாகவும் இருக்கும். மேலும் அடிப்பகுதி வெள்ளை நிறமாகவும், பக்கவாட்டில் ஆரஞ்சு நிறத்திலும், சில நேர்த்தியான இருண்ட கோடுகளுடனும் இருக்கும். இவற்றின் தடிமனான அலகு இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது.
இனப்பெருக்க ஆண் வெள்ளை தலை, மீசை போன்ற கோடுகளுடன், கருப்பு தலையையும் கொண்டுள்ளது. பிரகாசமான மஞ்சள் புருவக் கோடு உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Emberiza chrysophrys". IUCN Red List of Threatened Species 2016: e.T22720957A94692182. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22720957A94692182.en. https://www.iucnredlist.org/species/22720957/94692182. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London, United Kingdom: Christopher Helm. pp. 105, 145. ISBN 978-1-4081-2501-4.