மஞ்சள் தொண்டை சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் தொண்டை சின்னான்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கொண்டைக்
குருவி
பேரினம்: Pycnonotus
இனம்: P. xantholaemus
இருசொற் பெயரீடு
Pycnonotus xantholaemus
(ஜெர்டன், 1845)
வேறு பெயர்கள்
 • Brachypus xantholaemus[2][3]
 • Ixos xantholaemus

மஞ்சள் தொண்டை சின்னான் (yellow-throated bulbul (Pycnonotus xantholaemus) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச்சேர்ந்த, பேசரின் பறவை ஆகும். இவை தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள அகணிய உயிரியாகும். இவை செங்குத்தான, பாறைக் குன்றுகளின் உச்சியில் வாழக்கூடியன. இவற்றின் வாழிடங்கள் கிரானைட் சுரங்கங்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்த உயிரினத்தின் அழைப்புகள் வெண்புருவ கொண்டலாத்தியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இவற்றின் தோற்றமும் வெண்புருவ கொண்டலாத்திபோல இருந்தாலும் இதை சிலர் வெண்புருவக் கொண்டலாத்தியாக நினைத்துக் குழப்பிக் கொள்வதுண்டு. இதன் தலை, தொண்டை, போன்றவற்றில் உள்ள மஞ்சள் நிறம் இவற்றை வேறுபடுத்துவதாக உள்ளன.

உயிரியல் வகைப்பாடு[தொகு]

மஞ்சள் தொண்டை சின்னானை முதலில் தாமஸ் சி. ஜெர்டன் என்பவர் பிரோகிபஸ் பேரினத்தில் வகைபடுத்தினார். (பைக்கோனொனாட்டசின் வேறு பெயர்). பின்னர் மறு வகையாக்கத்தின்போது இக்சோசின் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது.[4] இது மீண்டும் பைக்கோனொனாட்டஸ் பேரினத்திலேயே மீண்டும் வகைப்படுத்தப்பட்டது.

பரவல் மற்றும் வாழிடம்[தொகு]

In scrub habitat
In scrub habitat
செஞ்சிக் கோட்டையில் மஞ்சள் தொண்டை சின்னானின் அழைப்பு

இந்தப் பறவைகளின் வாழிடமானது பாறைகள் நிறைந்த மலைகளின் மேற்பகுதி ஆகும். பெரும்பாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களான இந்த மலைக் காடுகள் கிரானைட் சுரங்கங்கள், காட்டுத் தீ, மேய்ச்சல் பொன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.[5] இதனால் இந்தப்பறவையானது முன்பு காணப்பட்ட பல இடங்களிலிலிருந்து அற்றுப்போய்விட்டது.[6]

1847 ஆண்டைய விளக்கப்படம்

இவை காணப்படும் சில இடங்களாக அறியப்பட்டவை நந்தி மலை,[7] ஹார்ஸ்லி மலைகள்,[8] செஞ்சி,[9] ஏற்காடு[10] வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை[11] பிலிகிரி ரங்கநாத மலை[12] போன்றவை ஆகும். இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆனைமலையின் சில பகுதிகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது.[13][14][15][16] இது வாழும் பகுதிகளின் வட எல்லையானது ஆந்திரத்தின் நல்லமலைக் குன்றுகள் எனப்படுகிறது[17] ஆனால் இவை வாழும் பகுதியானது வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒடிசாவரை இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது.[18][19]

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

இந்தப் பறவை கூச்ச சுபாவத்தைக் கொண்டிருப்பதால், புதர்களில் மறைந்து இருக்கும். இதன் வெண்புருவ கொண்டலாத்தை ஒத்திருக்கும் குரலைக் கொண்டு இதை அறியலாம். இவை பூச்சிகள் மற்றும் உண்ணிச்செடி, காட்டுமிளகு, செம்புளிச்சான், மணித்தக்காளி, சந்தனம், ஆல் அத்தி, உள்ளிட்ட தாவரங்களின் பழங்களையும் உண்ணும். வெயில்கால மாலை நேரங்கள் மற்றும் வறண்ட பருவங்களில் இவை நீர் குடிக்கவும், குளிக்கவும் குளங்களுக்கு வரும்.[20]

இவற்றின் இனப்பெருக்க காலம் சூன் முதல் ஆகத்து வரை ஆகும். இவை சிறிய மரமுட்களைக் கொண்டு பாறை இடுக்கில் கூடுகட்டும். கூட்டில் இரண்டு முட்டைகள் இட்டு 20 நாட்கள் அடைகாக்கின்றன. குஞ்சுகள் 13 நாட்களுக்குப் பிறகு பறக்கத் துவங்குகின்றன.[21]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Pycnonotus xantholaemus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 2. Jerdon, TC (1844). "Second supplement to the catalogue of the birds of southern India". Madras Journal of Literature and Science 13 (2): 116–144. https://archive.org/stream/madrasjournalofl1318madr#page/122/mode/1up/. 
 3. Sharpe, RB (1881). Catalogue of the birds in the British Museum. Volume 6 Cichlomorphae: Part 3. பக். 146. https://archive.org/stream/catalogueofbirds06brit#page/146/mode/2up/. 
 4. Jerdon, Thomas Claverhill (1863-01-01) (in en). The Birds of India: Being a Natural History of All the Birds Known to Inhabit Continental India, with Descriptions of the Species, Genera, Families, Tribes, and Orders, and a Brief Notice of Such Families as are Not Found in India, Making it a Manual of Ornithology Specially Adapted for India. Author. https://books.google.ca/books?id=6xc6AQAAMAAJ&pg=PA85&lpg=PA85&dq=Ixos+xantholaemus&source=bl&ots=FSrHd06OjS&sig=4TAmvZWYRzn6GgPUvf4QylMg-ak&hl=en&sa=X&ved=0ahUKEwj1t_yQl_zSAhVM5oMKHTwXBQwQ6AEINTAE#v=onepage&q=Ixos%20xantholaemus&f=false. 
 5. Subramanya, S.; JN Prasad; S. Karthikeyan (2006). "Status, habitat, habits and conservation of Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus (Jerdon) in South India". Journal of the Bombay Natural History Society 103 (2-3): 215–226. 
 6. Subramanya,S; Karthikeyan,S; Prasad,JN; Srinivasa,TS; Arun,B (1990). "A trip to Thondebhavi in search of Yellowthroated Bulbul". Newsletter for Birdwatchers 30 (11-12): 7. https://archive.org/stream/NLBW30_1011#page/n7/mode/1up. 
 7. Subramanya,S; Karthikeyan,S; Prasad,JN (1991). "Yellowthroated Bulbul at Nandi Hill". Newsletter for Birdwatchers 31 (3&4): 7–8. 
 8. Allen,P Roscoe (1908). "Notes on the Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus". J. Bombay Nat. Hist. Soc. 18 (4): 905–907. https://biodiversitylibrary.org/page/2222080. 
 9. Rao,TK (1995). "Yellowthroated Bulbul - Pycnonotus xantholaemus (Jerdon) in Gingee". Blackbuck 11 (1): 9–11. 
 10. Karthikeyan,S (1995). "Notes on the occurrence of the Yellowthroated Bulbul Pycnonotus xantholaemus (Jerdon) at Shevaroys, Tamil Nadu". J. Bombay Nat. Hist. Soc. 92 (2): 266–267. https://biodiversitylibrary.org/page/48613811. 
 11. செழியன்.ஜா (4 ஆகத்து 2018). "செஞ்சிக்கு வாங்க... சின்னானைப் பாருங்க..." கட்டுரை. இந்து தமிழ். 5 ஆகத்து 2018 அன்று பார்க்கப்பட்டது.
 12. Karthikeyan,S; Prasad,JN; Srinivasa,TS (1995). "Yellowthroated Bulbul Pycnonotus xantholaemus (Jerdon) at Biligirirangan Hills, Karnataka". J. Bombay Nat. Hist. Soc. 92 (1): 123–124. https://biodiversitylibrary.org/page/48613656. 
 13. Narayanan, S. P.; Boopal, A.; Nanjan, S.; Kurian, J.; Dhanya, R.; Gomahty, N.; Dastidar, D. G.; Rajamamannan, M. A. et al. (2006). "New site for the Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus from Tamil Nadu" (PDF). Indian Birds 2 (6): 151–153. http://www.indianbirds.in/pdfs/New%20site%20record%20of%20the%20Yellow-throated%20Bulbul.pdf. பார்த்த நாள்: 2018-08-05. 
 14. Beisenherz, W. (2004). "Rediscovery of the Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus in the Anaimalai Hills, Western Ghats, South India". J. Bombay Nat. Hist. Soc. 101 (1): 160. https://biodiversitylibrary.org/page/48568080. 
 15. Praveen J; L Namassivayan (2006). "Sighting of Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus from Chinnar Wildlife Sanctuary, Kerala, Southern India" (PDF). Zoos' Print Journal 21 (4): 2228. doi:10.11609/jott.zpj.1489.2228. http://www.zoosprint.org/zooprintjournal/2006/april/2228.pdf. பார்த்த நாள்: 2018-08-05. 
 16. Davison, W (1888). "Letters". Ibis 30 (1): 146–148. doi:10.1111/j.1474-919X.1888.tb07729.x. https://archive.org/stream/ibis561888188388brit#page/146/mode/1up/. 
 17. Srinivasulu, C. (2003). "Site records of yellow-throated bulbul Pycnonotus xantholaemus (Jerdon, 1844) in the Nallamala Hills, Eastern Ghats, Andhra Pradesh, India" (PDF). Zoos' Print Journal 18 (3): 1051–1052. doi:10.11609/jott.zpj.18.3.1051-2. http://www.zoosprint.org/ZooPrintJournal/2003/March/1051-1052.pdf. பார்த்த நாள்: 2018-08-05. 
 18. Subramanya S. (2004). "Does the Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus occur in Orissa?". Newsletter for Ornithologists 1 (3): 39–40. 
 19. "New site record of Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus from Andhra Pradesh". Indian Birds 5 (5): 157. 2010. http://indianbirds.in/pdfs/IB_5.5_157.pdf. 
 20. Karthikeyan S (1991). "On birds frequenting water puddles". Newsletter for Birdwatchers 31 (11&12): 8–9. https://archive.org/stream/NLBW31_1112#page/n9/mode/1up. 
 21. Collar NJ; A.V. Andreev; S. Chan; M.J. Crosby; S. Subramanya; J.A. Tobias (2001). Threatened Birds of Asia. BirdLife International. பக். 1969–1973. Archived from the original on 2012-02-16. https://web.archive.org/web/20120216013737/http://birdbase.hokkaido-ies.go.jp/rdb/rdb_en/pycnxant.pdf. பார்த்த நாள்: 2018-08-05. 

வெளி இணைப்புகள்[தொகு]