மஞ்சள் தொண்டை இலைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் தொண்டை இலைக்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: குளோரப்செடே
பேரினம்: குளோரப்சிசு
இனம்: கு. பலவானென்சிசு
இருசொற் பெயரீடு
குளோரப்சிசு பலவானென்சிசு
(சார்ப்பி, 1876)

மஞ்சள் தொண்டை இலைக்குருவி (Yellow-throated leafbird)(குளோரோப்சிசு பலவானென்சிசு) என்பது குளோரோப்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் உள்ள பலவான் பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு ஆகும்.

பலவான் இலைக்குருவி என்பது பரந்த இறக்கைகள் மற்றும் நீண்ட வால் கொண்ட ஒரு சிறிய பறவையாகும். இதன் உடல் பச்சை நிறத்திலும் தொண்டை மஞ்சள் நிறம் கொண்டது. இதன் மூலம் இதனை எளிதில் அடையாளம் காணலாம். இதன் பச்சை நிறம் வனத்தில் பறந்து கொண்டிருக்கும் போது பச்சை நிற இலைகளுக்கு இடையில் இவற்றைப் பார்ப்பதை மிகவும் கடினமாக்குகிறது. எனவே "இலைப்பறவை" என்று பெயர் பெற்றன.

பலவான் இலைக்குருவி பொதுவாகக் காடு, வன விளிம்பு மற்றும் புதர்க் காடுகளில் காணப்படுகிறது. இது வன விதானத்தில் பூச்சிகள் மற்றும் சிறிய பழங்களை உண்பதற்காக தன் கூர்மையான மெல்லிய அலகினைப் பயன்படுத்துகிறது. பலவான் இலைப்பறவை பலாபாக், புசுவாங்கா, கலாய்ட், கொரோன், குலியோன், டுமாரன் மற்றும் பலவான் நிலப்பரப்பில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Chloropsis palawanensis". IUCN Red List of Threatened Species 2018: e.T22704947A130352344. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22704947A130352344.en. https://www.iucnredlist.org/species/22704947/130352344. பார்த்த நாள்: 11 November 2021.