மஞ்சள் உடும்பு
மஞ்சள் உடும்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | செதிலுடைய ஊர்வன |
துணைவரிசை: | பல்லியோந்திகள் |
குடும்பம்: | Varanidae |
பேரினம்: | உடும்பு |
துணைப்பேரினம்: | V. (Empagusia) |
இனம்: | V. flavescens |
இருசொற் பெயரீடு | |
Varanus flavescens (Hardwicke & Gray, 1827) |
மஞ்சள் உடும்பு அல்லது தங்க உடும்பு என்பது ஒரு உடும்பு ஆகும். இவை ஆசியாவில் காணப்படுகின்றன.
விளக்கம்[தொகு]
மஞ்சள் உடும்பு செந்நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் மூக்கு குறுகியும், வால் நீண்டும் இருக்கும். இவை நன்கு நீந்தக்கூடியவை. இவை நன்னீர் நண்டுகளையும், மீன்களையும் உணவாக உட்கொள்ளக்கூடியவை. நடுத்தர அளவிலான இந்த உடும்புகள் மூக்கில் இருந்து உடல் நீளம் 50 செ.மீ (1 அடி 8) ஆகும். வாலோடு மொத்தமாக 100 செ.மீ நீளம் கொண்டது.
பரவல்[தொகு]
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகள் பாய்கின்ற இந்தியா, பாக்கித்தான், நேபாளம், வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்றுச் சமவெளிகளில் இவை காணப்படுகின்றன.[2]