உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சள்வயிறு புதர் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள்வயிறு புதர் தவளை
மஞ்சள்வயிறு புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
வேறு பெயர்கள்

Ixalus flaviventris Boulenger, 1882[2]

மஞ்சள்வயிறு புதர் தவளை (Raorchestes flaviventris, yellow-bellied bush frog, Malabar bubble-nest frog) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும்.[1] விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, இராவோர்செசுடெசு என்ற பேரினத்தில் அமைந்துள்ளது. இந்தத் தவளை கடல் மட்டத்திலிருந்து, 1382 முதல் 1900 மீட்டர் வரையிலான உயரத்தில், ஈரப்பதமான பசுமைமாறாக் காடுகளிலும், அத்தகைய காடுகளுக்கு அருகிலுள்ள ஏலக்காய்த் தோட்டங்களிலும் காணப்பட்டுள்ளது.[3] இந்தத் தவளை நேரடி வளர்ச்சி முறையில் இனப்பெருக்கம் செய்கிறது; இது சுதந்திரமாக நீந்தக்கூடிய தலைப்பிரட்டைப் பருவம் ஏதுமின்றி, முட்டையிலிருந்து நேரடியாகச் சிறிய தவளைக் குஞ்சாகவே வெளிவருகிறது.[1]

அழிவாய்ப்பு

[தொகு]

விவசாயம், குறிப்பாகச் சிறு அளவிலான விவசாயத்திற்காகக் காடுகள் அழிக்கப்படுவதால், இந்தத் தவளை வாழும் பகுதி மிகவும் குறைவாகவே உள்ளது; இதனால் இது அழிவைச் சந்திக்கக்கூடிய இனமாக, விஞ்ஞானிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாழ்விடப் பகுதியில் எரவிகுளம் தேசியப் பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் அடங்கும். இந்தத் தவளையின் ஐந்து அல்லது ஆறு கூட்டங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 IUCN SSC Amphibian Specialist Group (2023). "Malabar Bubble-nest Frog: Raorchestes flaviventris". The IUCN Red List of Threatened Species. 3.1. p. e.T87739329A87721492. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T87739329A87721492.en. 87739329. Retrieved March 13, 2024.
  2. ↑ Boulenger, George Albert (1882). Catalogue of the Batrachia Salientia s. Ecaudata in the collection of the British Museum (2 ed.). London: British Museum (Natural History). pp. 113–144. (Illustration: Plate XII)
  3. ↑ Frost, Darrel R. (2016). "Raorchestes flaviventris (Boulenger, 1882)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 27 September 2016.

மேலும் கற்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raorchestes flaviventris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Abraham, R. K., A. Zachariah, and V. P. Cyriac. 2015. A reappraisal of the rhacophorid bush frog Raorchestes flaviventris (Boulenger, 1882), with an evaluation of the taxonomic status of R. emeraldi Vijayakumar, Dinesh, Prabhu and Shankar, 2014. Zootaxa 4048: 90–100.
  • Bossuyt, F., and A. Dubois. 2001. A review of the frog genus Philautus Gistel, 1848 (Amphibia, Anura, Ranidae, Rhacophorinae). Zeylanica. Colombo 6: 1–112.
  • Vijayakumar, S. P., K. P. Dinesh, M. V. Prabhu, and K. Shanker. 2014. Lineage delimitation and description of nine new species of bush frogs (Anura: Raorchestes, Rhacophoridae) from the Western Ghats Escarpment . Zootaxa 3893: 451–488.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்வயிறு_புதர்_தவளை&oldid=4625724" இலிருந்து மீள்விக்கப்பட்டது