மஞ்சரி (இந்தியப் பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஞ்சரி
Manjari.jpg
செப்டம்பர் 2009இல் நடந்த சூர்யா விழாவில் மஞ்சரி
பிறப்பு17 ஏப்ரல் 1986 (1986-04-17) (அகவை 35)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
  • பாடகர்
  • இசைத் தாயாரிபாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை
பெற்றோர்பாபு இராசேந்திரன்
மருத்துவர். இலதா
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரலிசை

மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) [1] இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். [2] [3] [4] மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார். படங்களைத் தவிர, மஞ்சரி பல இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார். இவரது முதல் நிகழ்ச்சி எட்டாம் வகுப்பில் படிக்கும்போது கொல்கத்தாவைச் சேர்ந்த 'சிவா' என்ற ராக் இசைக்குழுவுடன் இருந்தது. [5]

தொழில்[தொகு]

சத்யன் அந்திக்காடு இயக்கிய திரைப்படமான 'அச்சுவின்டே அம்மா' என்ற மலையளப் படத்தில் இளையராஜாவின் இசையில் திரைப்பட இசை உலகிற்கு அறிமுகமானார். இவர் அப்படத்தில் கே. ஜே. யேசுதாசுடன் ஒரு பாடலையும், தனித்து ஒரு பாடலையும் பாடினார். பின்னர், இரமேஷ் நாராயண், இளையராஜா, எம். ஜி. இராதாகிருஷ்ணன், கைதாபிரம் விசுவநாதன், வித்தியாசாகர், எம். ஜெயசந்திரன், மறைந்த ரவீந்திரன் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். பாலபாஸ்கரின் மழயில் ஆரோ ஓரல் என்ற இசைத் தொகுப்புகளுக்கும் இவர் பாடியுள்ளார். 200க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் இவர் பல பாடல்களை பாடியுள்ளார். 2004 முதல், இவர், "சூர்யா" என்ற பதாகையின் கீழ் இந்தியாவிலும் உலகிலும் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கசல் பாடகியாக வும் இவர் புகழ் பெற்றார். 'மீடியா ஒன்' தொலைக்காட்சியில் கயல்' என்ற பிரத்யேக கசல் நிகழ்ச்சியை இவர் நிகழ்த்தினார். [6]

2005ஆம் ஆண்டில், சிறந்த பாடகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். சிறந்த பாடகருக்கான ஏசியானெட் விருதையும் இரண்டு முறை பெற்றுள்ளார். கிரானா கரானாவின் பண்டிட் இரமேசு ஜூலேவின் கீழ் இந்துஸ்தானி இசையில் தனது படிப்பைத் தொடர்கிறார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர், பாபு இராசேந்திரன், மருத்துவர். இலதா ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மாதுரி என்ற தங்கையும் உண்டு. இவர் ஓமான் சுல்தானகத்தின் இந்திய பள்ளியான அல் வாடி அல் கபீரின் முன்னாள் மாணவியாவார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Manjari (singer)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.