உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சரி ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சரி ஜோஷி
பிறப்பு19 மார்ச்சு 1960 (1960-03-19) (அகவை 66)
கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தொழில்எழுத்தாளர் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மொழி பெயர்பாளர்
தேசியம்இந்தியன்
வகைஎழுத்தாளர் செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மொழி பெயர்பாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாரதிய சங்கீத கி பரம்பரா

மஞ்சரி ஜோஷி (Manjari Joshi) இவர் இந்திய பொது சேவை ஒளிபரப்பு தொலைக்காட்சி வலையமைப்பான தூர்தர்ஷனின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1][2][3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

மஞ்சரி புது தில்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவில் பள்ளிப் படிப்பைப் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா கல்லூரியில் வேதியியலில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். பின்னர் ரஷ்ய மொழியில் கவனம் செலுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ரஷ்ய மொழியை ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மொழிபெயர்ப்பாளராக உள்ளார். செய்தித்தாள்களுக்கு கட்டுரைகள் எழுதியுள்ளார். தொலைக்காட்சி இதழியலை கற்பித்து வருகிறார்.[4][5]

நூல் பட்டியல்கள்

[தொகு]

அபாய் குன்னன்பேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (1995), (மொழிபெயர்ப்புகள்: ஹேம் சந்திர பாண்டே, வாரியம் சிங், மஞ்சரி ஜோஷி, அர்ச்சனா உபாத்யாயா), சாகித்ய அகாடமி, புது தில்லி (சர்வதேச தர புத்தக எண் 81-7201-815-0)

பாரதிய சங்கீத கி பரம்பரா (2002), தேசிய புத்தக அறக்கட்டளை, புது தில்லி. (சர்வதேச தர புத்தக எண் 81-237-3985-0)

ஊடகத்திற்கான எழுத்து (2011), (இணை ஆசிரியர் ஹேமந்த் ஜோஷி), விகாஸ் பப்ளிஷிங் ஹவுஸ், புது தில்லி. (சர்வதேச தர புத்தக எண் 978-81-259-4866-7)

பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பியல் அடிப்படைகள் (2011), (இணை ஆசிரியர் பேராசிரியர் ஹேமந்த் ஜோஷி), விகாஸ் பப்ளிஷிங் ஹவுஸ், புது தில்லி. (சர்வதேச தர புத்தக எண் 978-81-259-4807-0)

வளர்ச்சிக்கான தொடர்பு (2011), (இணை ஆசிரியர் ஹேமந்த் ஜோஷி), விகாஸ் பப்ளிஷிங் ஹவுஸ், புது தில்லி. (சர்வதேச தர புத்தக எண் 978-81-259-4817-9)

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Doordarshan Diwas". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 January 2008. http://timesofindia.indiatimes.com/The_Doordarshan_Divas/articleshow/2677780.cms#7.
  2. "Blog on World Malayalees: Alakananda of Asianet". Alakananda of Asianet. 28 July 2006.
  3. "Blog on Rediffiland: Doordarshan". Rediffiland. 3 May 2007.
  4. "IIMM, New Delhi".
  5. "NRAI, New Delhi". Archived from the original on 26 February 2008. Retrieved 28 February 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சரி_ஜோஷி&oldid=4398267" இலிருந்து மீள்விக்கப்பட்டது