மஞ்சட் கோட்டுச் சருகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஞ்சற் கோட்டுச் சருகுமான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முண்ணாணி
வகுப்பு: முலையூட்டி
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: சருகுமான் குடும்பம்
பேரினம்: நிலச் சருகுமான்
இனம்: M. kathygre
இருசொற் பெயரீடு
Moschiola kathygre
குரூவ்சு & மெய்யார்து, 2005

மஞ்சட் கோட்டுச் சருகுமான் (Moschiola kathygre) என்பது மிக அண்மையில் (2005 ஆம் ஆண்டு) தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்ட ஒரு சருகுமான் இனமாகும். இலங்கையின் ஈரவலயத்தில் காணப்படும் இவ்விலங்கு இலங்கைக்குத் தனிச் சிறப்பானதாகும்.

இவ்வினம் வெண் புள்ளிச் சருகுமான் (Moschiola meminna) இனத்திலும் தனியானதாகக் கருதப்பட்டு இனப் பாகுபாட்டு முறையைப் பயன்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளது.[2] மஞ்சட் கோட்டுச் சருகுமான் தனியினமாகக் குறிக்கப்பட்டது மிக அண்மைக் காலத்தில் என்பதால் இதனைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களும் மிகக் குறைவாகவே உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Duckworth, J.W. & Timmins, R.J. (2008). Moschiola kathygre. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 26 March 2009. இவ்வினம் ஏன் குறைந்த தீவாய்ப்புள்ள இனமாகக் கருதப்படுகிறது என்பதற்கான நியாயப்படுத்தல்களை தரவுத்தளம் கொண்டுள்ளது.
  2. Groves, C. and Meijaard, E. 2005. சருகுமான்களில் உள்ளக வேறுபாடு, இந்தியச் சருகுமான். The Raffles Bulletin of Zoology. Supplement 12: 413-421. PDF கோப்பு.