உள்ளடக்கத்துக்குச் செல்

மச்ச நாராயணன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மச்ச நாராயணன் கோயில்
மச்ச நாராயணன் கோயில் is located in தமிழ்நாடு
மச்ச நாராயணன் கோயில்
மச்ச நாராயணன் கோயில்
மச்ச நாராயணன் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:12°52′43″N 80°15′04″E / 12.878649°N 80.251249°E / 12.878649; 80.251249
பெயர்
பெயர்:மச்ச நாராயணன் கோயில்
அமைவிடம்
ஊர்:உத்தண்டி
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மச்ச நாராயணன்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டப்பட்ட நாள்:24-05-2015
கோயில் அறக்கட்டளை:மத்திய சின்மயா மிசன் அறக்கட்டளை
வலைதளம்:https://www.chinmayamission.com

மச்ச நாராயணன் கோயில் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தண்டி கடற்கரையோரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும்.[1] இக்கோயிலைச் சின்மயா மிசன் அமைப்பினர் கட்டியுள்ளனர். 2015-ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் திகதி மக்கள் பார்த்து வழிபட பூசைகள் நடைபெற்றன.[2]

அமைவிடம்

[தொகு]

மச்ச நாராயணன் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 17.89 மீ. உயரத்தில், (12°52′43″N 80°15′04″E / 12.878649°N 80.251249°E / 12.878649; 80.251249) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட இடத்தில் அமையப் பெற்றுள்ளது.

மச்ச நாராயணன் கோயில் is located in தமிழ்நாடு
மச்ச நாராயணன் கோயில்
மச்ச நாராயணன் கோயில்
மச்ச நாராயணன் கோயில் (தமிழ்நாடு)

விபரங்கள்

[தொகு]

மச்ச நாராயணன் கோயில் கோபுரம், விமானம், மேற்கூரை, கலசங்கள் என எதுவுமே இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. மூலவர் மச்ச நாராயணன், உடம்பின் மேல் பாதி மனித உருவம் தாங்கியும், கீழ் பாதி மச்ச (மீன்) உருவம் தாங்கியும் மச்ச அவதாரத்தை நினைவூட்டும் வகையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் உருவம் 12 அடி உயரத்தில் கிரானைட் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்பது அடி உயரம் கொண்ட 108 தூண்கள் காணப்படுகின்றன. இவற்றில் விஷ்ணு சஹஸ்ரநாமம், அஷ்டோத்திர சத நாமாவளி ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன.[3]

இதர சன்னிதிகள்

[தொகு]

மச்ச நாராயணன் கோயிலில் விஷ்ணு, இலட்சுமி, கிருஷ்ணர், மிருதுஞ்சய சிவன், இராமர், சீதை, இலட்சுமணன், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் ஆகியோர் சன்னிதிகளும் காணப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. mithran (2024-12-03). "உத்தண்டி பெருமாள் கோவில் வரலாறு, தரிசனம் | Mithiran News" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-02.
  2. "Matsyanarayana Temple | Chinmaya Mission Worldwide" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-06-02.
  3. "Visit Temples : Best Website for Visiting Temples in India". www.visittemples.com. Retrieved 2025-06-02.
  4. Yogalakshmy Ponnan (2023-01-17). "சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!". tamil.nativeplanet.com. Retrieved 2025-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்ச_நாராயணன்_கோயில்&oldid=4285397" இலிருந்து மீள்விக்கப்பட்டது